search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை வீழ்ச்சி"

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    • வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
    • கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றி லைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் இதனை பரமத்திவேலூர் - கரூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3500-க்கும் விற்பனை யானது. கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    நேற்று வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 500-க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிக ரிப்பாலும், முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
    • இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 200- க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம் ெபாத்தனூர், பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நடப்பு மாதத்தில் அதிக அளவில் கோவில் திருவிழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறாததால் வெற்றிலை தேவை குறைந்து வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    குண்டடம்:

    குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் அவற்றை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

    இந்த சந்தையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக ஆடு, கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    கடந்த வாரம் 10கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த வாரம் 10 கிேலா ஆடு ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் 1 கிலோ ரூ. 350 வரை விற்பனையானது. இந்தவாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது,வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.புரட்டாசி முடியும் தருவாயில் நல்ல விலை கிடைக்கும் என்றனர்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

        பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மரு தூர், சின்ன மருதூர், சேளூர் செல்லப்பம்பா ளையம், கொந்தளம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், வடகரை யாத்தூர், சின்ன சோளி பாளையம், பெரிய சோளி பாளையம், கொத்த மங்கலம், குரும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி,சோழ சிராமணி, சிறு நல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கபிலர் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க் கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்ற னர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரி களில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது.

    உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரை யிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

    இப்பகுதியில் அதிக அளவில் தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.25-க்கு விற்பனையானது.

    பாலக்கோடு பகுதியில் முள்ளங்கி அறுவடை தொடங்கியதால் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது முள்ளங்கி அறுவடை தொடங்கி உள்ளது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து சுத்தம் செய்து உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை கூலி, வண்டி வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாததால் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை‌ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான நன்செய் இடையாறு, குச்சிபாளையம் குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

    பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ஆயிரத்து 700க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
    • மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப் பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப் பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படு கிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையா ளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின் நனர்.

    கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்து 500 -க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.11ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

    வரத்து அதிகரித்துள்ள தால், மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து உள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயி கள் கவலை அடைந்துள் ளனர்.

    • பரமத்திவேலுார் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
    • வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், அண்ணா நகர், செல்லப்பம் பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன்

    உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வாழைத்தார் வெட்டும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் நடைபெற்று வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற் பனை செய்து வரு கின்றனர்.

    வாழைத்தார்களை ஏலம் எடுத்து செல்வதற்காக நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

    வாங்கிய வாழைத் தார்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கு விற்றது, தற்போது அதிகபட்சமாக, ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்ற, ரஸ்தாளி தார், தற்போது, ரூ.250-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்றது நேற்று ரூ.200-க்கும், ரூ.250-க்கு விற்ற பச்சநாடன் வாழைத்தார் தற்பொழுது ரூ ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று, ரூ.5 விற்ற நிலையில், தற்போது, ரூ.3-யாக குறைந்துள்ளது.

    வரத்து அதிகமானதும், மேலும் வெயில் காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் வாழைப்பழம் தோல்கள் கருப்பாக மாறிவிடுவதும் இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×