என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தம பாளையம், கொண்டி செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமு கக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளை யத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
- இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலைேயாரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
- காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
அரசு பள்ளி ஆசிரியர்
இவர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தங்கள் மகனைப் பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் நாமக்கல்லில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை ஜூலியட் பிரேமலதா உயிரிழந்தார். அவரது கணவர் ரகுநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆசிரியையின் உடல் நாமக்கல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் உமா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன்சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
இதில் சமூக நலத்துறை பணியாளர்கள், செவி லியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறையினர் பங்கேற்று குழந்தை சுயபாதுகாப்பு அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பதாகை ககளை ஏந்தி சென்றனர்.
இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தொழிலாளர் உதவி இணை ஆணையர் திருநந்தன், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது.
- ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம்:
திருப்பூர், பல்லடம், சோமனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கலர்நூல்களை பயன்படுத்தி தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைதறிகளில் அனைத்து ரக ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் கழிவு பஞ்சு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திருப்பூர், பல்லடம், சோமனுர் ஆகிய பகுதியில் செயல்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்களில் நேற்று முதல் 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
- தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.
- தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் ஒரு டேங்கர் லாரி, 2 சரக்கு லாரிகள் என 3 லாரிகளை அதன் டிரைவர்கள் நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதில் ஒரு லாரியில் காட்டன் துணி வகைகள் லோடு இருந்தது. மற்ற 2 லாரிகளில் சரக்குகள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென 3 லாரிகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அப்பகுதியில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து பேலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
வாழைகள் வெட்டி சாய்ப்பு
அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகன்யா, பரமத்தி வேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி (பரமத்தி வேலூர்), ரவி (பரமத்தி), செல்வராஜ் (வேல கவுண்டன்பட்டி) மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி,வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் பதிவான பதிவுகளை வைத்தும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜேடர்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் யாராவது வாழை மரம் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன.
- தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகள் சுமார் 20 டன் அளவுக்கு நகராட்சி தூய்மை பணி யா ளர்கள் அகற்றினர். மேலும் மாரி யம்மன் கோவில் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட குப்பைக ளை யும் அகற்றினர்.
- நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
- பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை களை சேந்த மங்கலம் சாலை முதலைப்பட்டி, கொச வம்பட்டி ரோஜாநகர் ஆகிய பகுதி களில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நுண்ணுயிர் செயலாக்கம் மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படு கின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப் பட்டு தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகின்றன.
5 டன் குப்பைகள் தேக்கம்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நாமக்கல் நகராட்சியில் பொதுமக்கள் கோலாகலமாக கொண்டா டினர். இதில் பட்டாசு வெடித்ததில் குப்பைகள் குவிந்தது.
இதையடுத்து பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் நாள்தோறும் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 5 டன் பட்டாசு கழிவுகள் தேங்கியது. இவைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலைகளில் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
- உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
1050 கிலோ பறிமுதல்
இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






