விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம்முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும்.
விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம் பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும். ஆகவே கேசிசி அட்டை இதுவரை பெறாத விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com