search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் இன்று முதல் 20-ந்தேதி வரை அனைந்திந்திய கூட்டுறவு வார விழா
    X

    நாமக்கல்லில் இன்று முதல் 20-ந்தேதி வரை அனைந்திந்திய கூட்டுறவு வார விழா

    • கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
    • கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.

    நாமக்கல்:

    கூட்டுறவுத்துறை சார்பில் 70-வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.

    இது தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் செல்வகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

    விழாவின் முதல் நாளான இன்று (14-ந்தேதி) நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு கொடியேற்றி, கூட்டுறவு வார விழா உறுதிமொழி எடுத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    2-வது நாளான நாளை (15-ந்தேதி) திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா நடத்தப்பட உள்ளது. இதேபோல் 16-ந்தேதி ஆர்.பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 17-ந்தேதி நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.

    18-ந்தேதி ஆன்றாப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் கருத்தரங்கமும், 19-ந்தேதி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது. விழா நிறைவு நாளான 20-ந்தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கூட்டுறவு நிர்வாகிகள், பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×