என் மலர்
நாமக்கல்
- பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி யது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை வகித்தார்.
- பொது மக்கள், விவசாயிகள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 451 மனுக்களை வழங்கினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த
24-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி யது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை வகித்தார்.
ஏராளமான பொது மக்கள், விவசாயிகள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 451 மனுக்களை வழங்கினர்.
இதில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. கவுசல்யா அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வி.ஏ.ஓ.க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு, கிரா மத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெயரிடப்பட்ட பயிர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, பரமத்தி வேலூர் தாலுகா அலுவல கத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவடைந்தது. இதில் தாசில்தார் கலைச்செல்வி, ஆர்.ஐ. லட்சுமி மற்றும் வி.ஏ.ஓ.க்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- குமாரபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- சாய கழிவு நீர் திறந்து விட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றுவதாக குமாரபாளையத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பள்ளிப்பாளையம்:
குமாரபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் குமாரபாளையத்தில் உள்ள ஒரு சில சாய ஆலைகள் அரசு விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் வடிகால் வழியாக சாய கழிவு நீர் திறந்து விட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றுவதாக குமாரபாளையத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் என்ஜினீயர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள், குமாரபாளையத்தில் உள்ள சாய ஆலைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, 3 சாய ஆலைகள் அரசு விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாய ஆலைக்கு விநியோகம் செய்யப்பட்ட மின் இணைப்பு துண்டித்து, சாய ஆலைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நல்லூர் ஆர்.ஐ மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். இதையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேல்சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கீதா, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மழை காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையொட்டி, கண்ணூர்பட்டி கிராமத்தில், வள்ளி அணைக்கட்டு மேல்புறம், கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3.153 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கதிரநல்லூர் கிராமத்தில் வரட்டாறு அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.535 தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
பொடங்கம் கிராமத்தில் பொடங்கம் தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.835 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது. தாத்தாதிபுரம் கிராமத்தில் கட்டியண்ணன் கோயில் அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 1.90 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது.
கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 10.17 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு செய்தார்.
அப்போது, தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் அருக ருகே இயங்கி வருகிறது. மேலும் தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
- இதனால் பழைய பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் அருக ருகே இயங்கி வருகிறது. மேலும் தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர் அருகில் உள்ள பொத்தனூர், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள், பொது மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அகற்றப்பட்டு பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழைய பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. எனவே இதில் ஏதாவது 2 கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில், பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் 4 டாஸ்மார்க் கடைகள் இருப்பது தேவையற்றது. இதை 2 ஆக குறைக்க வேண்டும். உள்ளூர் அரசி யல்வா திகள் ஆதிக்கத்தால் 4 டாஸ்மாக் கடைகள் வந்தது, பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது என்றனர்.
- பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
- பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் வெள்ளைச்சாமி (வயது 58). கூலி தொழிலாளியான இவர், பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் வெள்ளைச்சாமி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்கா மல் சென்ற வாகன ஓட்டு னர் குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
- 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
இதனை அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல், தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானிய விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்ற வராக இருக்கக் கூடாது. மேலும் சிறு, குறு விவ சாயிகள், பெண் விவசாயி கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளி 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் இம்மாதம் 13-ந் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
- கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கடன்கள் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.
தனி நபர் கடனாக திட்டம் 1-ன் கீழ் கடன் பெற விரும்பும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கு வேண்டும். திட்டம் 2-ன் கீழ் கடன் பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ரூ. 30 லட்சம் அதிகபட்சமாக கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 6 முதல் 8 சவீதம் வரை விதிக்கப்படும்.
சுய உதவிக்குழு கடன் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கல்விக்கடன் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 3 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கைவினைஞர்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.
விருப்பமுள்ள சிறுபான்மை சமூகத்தினர், அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவேண்டும். கடன் மனுக்களுடன், தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்த கடன் உதவியை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம்.
- திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி யைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ண னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
நான், எனது மனைவி செல்வி மற்றும் 2 மகள்கள், 1 மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன்.
தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது 2 மகள் களும் மீட்கப்படவில்லை.
அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம். எனவே எங்களின் 2 மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு,
- 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.
தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சங்ககிரி ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். 4 மற்றும் 5-ந் தேதிகளில், சங்ககிரி ரவுண்டானாவில் இருந்து வேலூர் மற்றும் ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ரோடு, மலை சுத்தி ரோடு, வாலரைகேட் வழியாக செல்ல வேண்டும். வாலரை கேட்டிலிருந்து நாமக்கல், சேலம், சங்ககிரி செல்லும் வானங்கள் மலைசுத்திரோடு வழியாக செல்ல வேண்டும்.
தேர் திருவிழாவின் போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பழமை வாய்ந்த திருத்தேரின் நன்மையைக் கருதி, பக்தர்கள் தேரின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியவில்லை.
எனவே பக்தர்கள் அனைத்து பூஜைகளையும், திருத்தேரின் முன்பாக செய்து, சாமி தரிசனம் செய்து அருள்பெருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






