10 நாட்களுக்கு முன்பு மாயமான அக்காள், தங்கை கதி என்ன?

கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை.
10 நாட்களுக்கு முன்பு மாயமான அக்காள், தங்கை கதி என்ன?
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி யைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ண னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

நான், எனது மனைவி செல்வி மற்றும் 2 மகள்கள், 1 மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன்.

தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது 2 மகள் களும் மீட்கப்படவில்லை.

அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம். எனவே எங்களின் 2 மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com