என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamabandhi completion"

    • பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி யது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை வகித்தார்.
    • பொது மக்கள், விவசாயிகள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 451 மனுக்களை வழங்கினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த

    24-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி யது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை வகித்தார்.

    ஏராளமான பொது மக்கள், விவசாயிகள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 451 மனுக்களை வழங்கினர்.

    இதில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. கவுசல்யா அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வி.ஏ.ஓ.க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு, கிரா மத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெயரிடப்பட்ட பயிர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து, பரமத்தி வேலூர் தாலுகா அலுவல கத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவடைந்தது. இதில் தாசில்தார் கலைச்செல்வி, ஆர்.ஐ. லட்சுமி மற்றும் வி.ஏ.ஓ.க்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×