என் மலர்
நாமக்கல்
- வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவிலில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது.
- திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவி லில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடே சன், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகை யில், தி.மு.க. ஆட்சியில் திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் அமைய உள்ளது. இங்கு அடுத்த வருடம் அர்த்தநாரீஸ்வரர் புதிய தேரில் வலம் வர உள்ளார் என்றார்.
விழாவில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனி தாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் வரவேற்று பேசினார். நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.
- பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவ லகத்தில் தபால்துறை அலுவலர்களால் நடத்தப்ப டும் சிறப்பு முகாமிற்கு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்ட செல்போன், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்று ஆகிய வற்றுடன் நேரில் வந்து விவசாயிகள் தங்களது விபரங்களை சரி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
- 3 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணி யன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் செல்வி, திருப்பூர் மாவட்ட தனித்துணை கலெக்டராக வும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) பால கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நடேசன், கோவை மாவட்ட மேலாளராக (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
- தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள் நாமக்கல் வட்டார ஒருங்கி ணைந்த வேளாண்மை விரி வாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
இந்த விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் சாகு படிக்கு தேவையான விதையை, மானிய விலை யில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாரமங்கலம் கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
- வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்காடு:
ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.
இந்த நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரத ராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.
இந்த நிலையில் வரத ராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்
பெக்டர் செந்தில்
ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார்.
- திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய், தந்தையுடன் அப்பகுதியில் உள்ள தகரம் வேயப்பட்ட குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக குமார் வெளியில் சென்று விட்டார்.
இந்நிலையில் திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.அதை பார்த்த குமாரின் மகன் இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து பார்த்தபோது குடிசை வீட்டில் தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து தீயைஅணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடிய வில்லை.
இது குறித்து வேலா யுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குமார் மாடி வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ.5 1/2 லட்சம் பணம், 12 பவுன் தங்கச் செயின், வீட்டு பத்திரம், வெள்ளி கொலுசு, வெள்ளி அரணா மற்றும் பல்வேறு ஆவணங்கள், துணிமணி கள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின . இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
- முட்டை விலை நேற்று மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-570, பர்வாலா-472, பெங்களூர்-565, டெல்லி-491, ஹைதராபாத்-495, மும்பை-560, மைசூர்-572, விஜயவாடா-515, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-540.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.107 ஆக நிர்ணயித்துள்ளது.
- தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- களங்காணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவா ளத்தில் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தி ருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இது தொடர் பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி:
சங்ககிரியில், சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் பிரபு (சங்ககிரி), சண்முகம் (சின்னாக்கவுண்டனூர்), கிராம உதவியாளர்கள் தீனதயாளன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
- தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.
- மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியு மான குணசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத் தில், சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள், ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு களில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வியல் வழக்குகள், காசோலை, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரசினைகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறை யீடு கிடையாது. மேலும், இம்மன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம், முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்கள், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை அனுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
- கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.
இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை இருக்கும்.
வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 55 முதல் 75 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இந்த நிலையில், இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத் தில் பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளளது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தலா 8 மி.மீ, 5 முதல் 7-ந் தேதி வரை தினசரி 4 மி.மீ மழை யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோழிப்பண்ணையாளர்களுக்கு: சமீப நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால், கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிக மாகியுள்ளது. ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும். ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்தலாம்.
கால்நடை வளர்ப்போருக்கு: தற்போது மாவட்டத்தில் ஆங்காங்கே ஆட்டுக் கொல்லி நோய் தாக்குதல் தென்படுகிறது. இதை தடுக்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒரு முறை மறு தடுப்பூசி போட வேண்டும்.
விவசாயிகளுக்கு:நடப்பு சித்திரைப் பட்டத்தில் நிலக்கடலை கோ-7 மற்றும் தரணி ரகத்தை தேர்வு செய்து விதைக்கலாம். நடப்பு மானாவாரி பரு வத்தில் ஆமணக்கு, உளுந்து, பாசிப்பயறு ரகத்தினை பயிரிடலாம். மரவள்ளிக்கி ழங்கு பயிரில் செம்பேன் நோய் தாக்குதலை கட்டுப்ப டுத்த இலை வழியாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வானிலை முன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
- பி.டி.ஓ. அலுவலகத்தில், பஞ்சாயத்து நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
- தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் பி.டி.ஓ. அலுவலகத்தில், பஞ்சாயத்து நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர். அதில், பஞ்சாயத்து அளவில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்தும், கால தாமதத்திற்கான காரணம், பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்தில் கலெக்டை உமா பேசியதாவது:
பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகம் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்கி, விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், அதன் முன்னேற்றம் குறித்து, பி.டி.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தால், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கிய பின்னரும் பணிகளை தொடங்காத பஞ்சாயத்து செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், பி.டி.ஓக்கள் சுந்தரம், அசோகன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






