என் மலர்
நாமக்கல்
- முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது.
- முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முட்டை கோழி விலை, நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று 1௦௦ ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 97 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.129 ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
- காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
- திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நேற்று திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் மகேஸ்வர பூஜை நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 296 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டதற்காக, நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மற்றும் பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர்களுக்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கான கிரீன் சாம்பியன் விருதினை கலெக்டர் வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95 ஆயிரத்து 580 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்ட அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ மணிமேகலை, டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குநர் சிவக்குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி சப்-கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடுப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு சசிரேகா என்ற மகள், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார், கோபி ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.
இதில் சசிரேகா, ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். மகன் கோபி திண்டுக்கல்லில் தச்சுவேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் நந்தகுமார் (35) பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நடேசனுக்கும், நந்தகுமாருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவர்கள் பல இடங்களில் வைத்தியம் பார்த்தனர். நடேசனுக்கு தச்சு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன் வாங்கி சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார்.
இதனிடையே கடன் கொடுத்தவர்கள் நடேசனிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமலும், நோய் பாதிப்பாலும் அவதிப்பட்ட நிலைியல் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். விரக்தியில் இருந்த அவர் தனது மனைவி, மகனிடமும் இதை கூறியுள்ளார். இதனால் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தனர்.
அங்கு நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.
பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.
- வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது.
பரமத்திவேலூர்:
தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20). பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் பயின்று வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சிரஞ்சீவி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ராஜா வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அவருடன் வந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ராஜவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.
வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சிவகிரி கிரண் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சிவகிரி கிரண் தூக்கில் பிணமாக தொங்கியுளளார்
இதனை பார்த்த அவர்கள், நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஹைதராபாத்தில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நாமக்கல் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
- ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
ஆட்டோ, நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, டிரைவர் லாரியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
லாரியை சோதனை செய்தபோது, அரசு அனுமதி இன்றி 1 யூனிட் கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து நடந்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பூபதிராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
- விவசாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், சேளூர், அய்யம்பா ளையம், வடகரை யாத்தூர், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகா தேவி, கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, ஆனங்கூர், பாகம் பாளை யம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள னர். பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகா மையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட் டிற்கும்
மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்ற னர். வெல்ல சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,330-க்கும் விற்பனை யானது. நேற்று உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20-க்கும் விற்பனையானது.
கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிபட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 30). இவர்களுக்கு 3½ வயதில் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இளம்பெண் தற்கொலை
இதில் மனமுடைந்த தாமரை செல்வி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.
- வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குமாரபாளையத்தில் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறா வளி காற்றுடன் இடி மின்ன லுடன் கனமழை பெய்தது.
- பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறா வளி காற்றுடன் இடி மின்ன லுடன் கனமழை பெய்தது. இதில் நகரில் காவேரி நகர், பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தர்காடு, கிழக்கு காலனி, நாராயண நகர் உள்ளிட்ட பல இடங்க ளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
சேலம் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெ டுத்து ஓடியது.
சாலையின் இருபுறமும் புதிய வடிகால் அமைத்தும், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகனம் போக்குவரத்து தடைபட்டது. மழை நின்று தண்ணீர் வடிந்த பின் வாகனங்கள் சென்றன.
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று, சாய்ந்த மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுத்தார். நகராட்சி தூய்மை பணியாளர்கள் மரங்கள் சாய்ந்த இடங்களில் சென்று மரங்களை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழி ஏற்படுத்தினர்.
இரவில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பின் மின்வாரிய பணியா ளர்கள் இரவு என்று பாரா மல், மின் கம்பிகளை சரி செய்தனர்.






