search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fall in price"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம் ெபாத்தனூர், பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நடப்பு மாதத்தில் அதிக அளவில் கோவில் திருவிழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறாததால் வெற்றிலை தேவை குறைந்து வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பர மத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், சேளூர், அய்யம்பா ளையம், வடகரை யாத்தூர், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகா தேவி, கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, ஆனங்கூர், பாகம் பாளை யம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள னர். பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகா மையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட் டிற்கும்

    மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்ற னர். வெல்ல சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,330-க்கும் விற்பனை யானது. நேற்று உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20-க்கும் விற்பனையானது.

    கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×