நடந்தை அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
நடந்தை அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, டிரைவர் லாரியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

லாரியை சோதனை செய்தபோது, அரசு அனுமதி இன்றி 1 யூனிட் கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து நடந்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பூபதிராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com