நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு

சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com