என் மலர்
நாகப்பட்டினம்
- வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்கு வளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், மாசி மாத கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
- மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.
விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.
விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.
- பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
- கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கில் உள்ள செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் அக்னி சட்டி பிரவேசம், சனீஸ்வர பூஜை, வனபத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி பூஜைகளுடன் நேற்று சக்தி கலா கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் உலக நன்மை வேண்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை யொட்டி கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.
- வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள பனங்காடி கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோ விலில் திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு நடைபெற்றது.
இதனை யொட்டி முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து வரத விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்க ல்யாணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.
கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.
முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.
- 8-ம் நாள் விழாவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், எழுந்தருளினர்.
- இரவு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது
இந்த நிலையில்நேற்று எட்டாம் நாள் திருவிழாவில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் எழுந்தருளினர்கள்பின்பு அர்த்தநாரீஸ்வரர் படி இறங்கி ராஜ நாராயண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி அப்பர் சம்பந்தர் சுந்தரருக்கு எழுந்தருளி காட்சி கொடுத்தார்பின்பு சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் மகர தோரணவாயில் உள்ள கதவிற்கு வெள்ளிகவசம் அமைத்துக் கொடுத்த சண்முகானந்தம் குடும்ப த்தினர் செய்திருந்தனர்.
- ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
- சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபா ண்டியன் (வயது 37).
இவர் மணக்குடி கடைத்தெரு அருகே சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று ள்ளார்.
அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாரத விதமாக மோதியது.
இதில் சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தலைஞாயிறு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
- நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை உள்ளிட்ட அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல அதிகளவில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாகையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததும், போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.
- அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
- சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.
அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.
இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.
பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.
அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.
இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.
- ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி, வெண்மணி, ஆந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தலா ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்காலிக இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மேலும் வெயிலில் குழந்தைகள் அமர்ந்திருக்கும் அவலமும் உள்ளது.
எனவே உடனடியாக அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது.
- பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாரமாக கனமழை பெய்தது இதனால் அறுவடைக்கு தயாராக சம்பா தாலடி மற்றும் ஊடுபயிராக உளுந்து அழுகி சேதமடைந்தது. இதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி காரப்பிடாகை வடக்கு பகுதியில் சுமார் 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் அதிகாரிகளிடம் முறை–யிட்டும் பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகள் கீழையூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் விதைகள் வாங்கி சாகுபடி செய்த உளுந்து பயிர்கள் விதைத்து 50 நாட்கள் ஆகி அறுவடை நேரத்தில் மழையால் சேதமடைந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்விக் கடன் பெறுவதில் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
- வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணையினை வழங்கினர்.
முகாமில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது, மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களை தேடி அலைந்த காலம் உண்டு.
ஆனால் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மாவட்டம் தோறும் கல்விக் கடன் முகாம்களும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.
கல்விக் கடன் பெறுவதிலும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட அளவில்கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டு அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதுபோல் மாவட்ட அளவில் 4 பெரிய வேலை வாய்ப்பு முகாம்களும், வட்டார அளவில் 6 முகாம்களும் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
சுமார் 10,000 பேர் பங்கேற்ற அம்முகாம்களின் மூலம் சுமார் 4,000 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வேலையின்மை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.






