search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் திருக்கதவு திறக்கும் விழா
    X

    வண்ணமலர்களால் திருக்கதவு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் திருக்கதவு திறக்கும் விழா

    • அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
    • சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

    அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.

    இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.

    இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.

    பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.

    அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.

    Next Story
    ×