search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    பணி நியமனை ஆணையை வழங்கல்

    நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • கல்விக் கடன் பெறுவதில் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
    • வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணையினை வழங்கினர்.

    முகாமில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது, மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களை தேடி அலைந்த காலம் உண்டு.

    ஆனால் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மாவட்டம் தோறும் கல்விக் கடன் முகாம்களும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    கல்விக் கடன் பெறுவதிலும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட அளவில்கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டு அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதுபோல் மாவட்ட அளவில் 4 பெரிய வேலை வாய்ப்பு முகாம்களும், வட்டார அளவில் 6 முகாம்களும் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

    சுமார் 10,000 பேர் பங்கேற்ற அம்முகாம்களின் மூலம் சுமார் 4,000 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வேலையின்மை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×