என் மலர்
நீங்கள் தேடியது "Gram crops"
- 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது.
- பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாரமாக கனமழை பெய்தது இதனால் அறுவடைக்கு தயாராக சம்பா தாலடி மற்றும் ஊடுபயிராக உளுந்து அழுகி சேதமடைந்தது. இதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி காரப்பிடாகை வடக்கு பகுதியில் சுமார் 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் அதிகாரிகளிடம் முறை–யிட்டும் பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகள் கீழையூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் விதைகள் வாங்கி சாகுபடி செய்த உளுந்து பயிர்கள் விதைத்து 50 நாட்கள் ஆகி அறுவடை நேரத்தில் மழையால் சேதமடைந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






