என் மலர்
நாகப்பட்டினம்
- வரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்திப்பெற்ற வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது வரதராஜப்பெருமாளுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- கலைத்திருவிழா நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்.
இதில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் மேம்பாட்டிற்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகள், அதன் மூலம் அனைத்து வகையான, மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்த உதவுதல், கலையரங்கம் என்னும் தலைப்பில் கலைத் திருவிழா நடத்துவதற்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் லோகநாதன், நரேஷ் குமார், கீதா, ரத்தினமலர் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
- வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.
- 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரான்ஸில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படு கிறது.
இதில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பிக்க லாம். இதில் 55 தொழிற்பிரி வுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இப்போட்டிக்கு விண்ணப் பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இதற்கான கல்வித்தகுதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் நேரிலோ, அல்லது 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.
- நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை திருவைக்காவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாண்டியன் (வயது 36).டிராக்டர் ஓட்டுனர்.
இவர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் நரிமேனி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். தடுப்பனை கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தார்.
டிராக்டரில் ஏற்றப்பட்ட இரும்பு கம்பியின் மேல் மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த ஹோகன் மொண்டல் (வயது 33), அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடிமொய் கோஸ் (வயது 26),கோபிண்டா மொண்டல் (வயது 32),தீபன் மொண்டல் (வயது 38), கணேஷ் மொண்டல் (வயது 38) ஆகிய 5 பேர் சென்று கொண்டிருந்தனர். திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரர் சுடுகாடு அருகில் டிராக்டர் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் கவிழ்ந்தது.இதில் டிராக்டரில் சென்றவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹோகன் மொண்டல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேரானது முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
- பக்தர்கள் ஆடு, மாடுகளை காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் ஆங்கிலேயர்க ளால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணி யார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்த ஆண்டுக்கான ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன்6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், மாதா, சம்மனுசு ஆகியோர் எழுந்தருளினர்.
முன்னதாக, ஆலய பங்குத்தந்தை தேவ சகாயம் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் வாத்திய இசை முழக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பல்லாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாம்பிராணி சட்டியை கையில் ஏந்திய படியும், ஆடு மாடு உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்த தேர் பவனியில் சுற்று வட்டாரமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிப்பட்டனர்.
- பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
- கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பி னராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்க வேண்டும்.
பயிர்கடன் தனிநபர் ரூ.1.6 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550, பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550 ஆக மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும்.
மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110-க்கு பங்கு தொகை மற்றும் நுழைவு க்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர் 73387 21201 என்ற எண்ணிற்கு அல்லது நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளர் 90879 46937 என்ற எண்ணிற்கோ அல்லது துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் 90800 15003 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி கூப்பன்களை வழங்கினார்.
- மாணவர்கள் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் நாகையில் ஓரு தனியார் கல்லூரியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்துக்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி தேர்வுக்கான கூப்பன்களை வழங்கினார்.
தொடர்ந்து பேசி அமைச்சர், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், தங்களையும்தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற்றம் பெற போட்டித் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழக மீன் வளர்ச்சி தலைவர் கௌதமன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட வருவாய் அலுவலர் வீ.சகிலா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
- வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.
அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.
இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் ஜல்லிக்கற்கள் முற்றிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
- சாலையில் மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் போகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் நடுக்கடை-தண்டாளம் இடையே திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலையை கட்டுமாவடி, தண்டாளம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து அடிக்கடி காயம் அடைகின்றனர்.
இது குறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர் பரமநாதன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் மதுமிதா கலந்துகொண்டு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.
இதில் பகுதி சுகாதார செவிலியர் பானுமதி, ஊராட்சி செயலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
முடிவில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- 1,100 மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
- எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்ட படிப்புகள் உள்ளன.
மேலும், இக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்டது.
இக்கல்லூரியில், தற்போது 1,270 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதில் 1,100 மாணவிகள் பட்டப்ப டிப்பு படித்து வருகின்றனர்.
கிராமப்புறத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்ட தால் இங்கு பயிலும் மாணவ- மாணவிகள் எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ. பாடத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
- போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.
இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.
இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.
இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






