search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.40 கோடி இலக்கு
    X

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.

    விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.40 கோடி இலக்கு

    • பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பி னராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்க வேண்டும்.

    பயிர்கடன் தனிநபர் ரூ.1.6 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550, பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550 ஆக மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும்.

    மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110-க்கு பங்கு தொகை மற்றும் நுழைவு க்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர் 73387 21201 என்ற எண்ணிற்கு அல்லது நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளர் 90879 46937 என்ற எண்ணிற்கோ அல்லது துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் 90800 15003 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×