search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முடிகொண்ட ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா?
    X

    மக்கள் பயன்பாட்டில் உள்ள குறுகலான பாலம்.

    முடிகொண்ட ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா?

    • குறுகலான பாலத்தை கடந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி மேலத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் திருமருகல், திட்டச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர மேலத்தெருவில் இருந்து முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகலான பாலத்தை கடந்து வாளாமங்கலம் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    அதேபோல் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவர்க ளும் பாலத்தை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போது அதிக பயன்பாடு இல்லாமல் உள்ளது.

    இதனால் ஆட்டோ,கார் மற்றும் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வசதி இல்லாமல் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி இப்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே கட்டுமாவடி ஊராட்சியையும் சீயாத்த மங்கை ஊராட்சியையும் இணைக்கும் வகையில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே குறுகலான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி ஆற்றங்கரையில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×