என் மலர்
நாகப்பட்டினம்
- சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
- பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது காலநிலை மாற்றுவதனாலும் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்க ணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது.
தற்போது சரணால யத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் ள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு , நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
- ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
- கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
- சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.
இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.
வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.
வரும் 1-ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
- 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.
மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
- சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரதோஷம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோல வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
- சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்ப டும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.
இந்தாண்டு பெருவிழா நாளை (29-ந்தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.
வரும் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.
வரும் 1-ந்தேதி மாலை சிலுவை பாதையும், 7-ந்தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டா டப்படுகிறது.
காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி, போலீஸ்துறையினர் செய்து வருகின்றனர்.
- கடந்த 23-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை விழா தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மேலகொத்தமங்கலம் கிராமத்தில் காலபைரவர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம், கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.
கடந்த 24-ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேச பலி,அஷ்டபைரவ ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
25-ம் தேதி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம்,மண்டப பூஜை,காலபைரவர் மூல மந்திர ஹோமம், முதற்கால பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து 26-ம் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை,மண்டப பூஜை,கால பைரவர் மகா மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், சோம பூஜை, அஷ்ட பைரவர் சாந்தி ஹோமம், கன்யா பூஜை, வடுகபூஜை, சுமங்கலி பூஜை,லட்சுமி பூஜை,தனபூஜை காலபைரவர் மூலசக்தி ஹோமம் நடைபெற்றது.
கோ பூஜை,பிம்பசுத்தி,ருத்ர ஹோமத்தை தொடர்ந்து காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடை பெற்று காலை 9.30 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷே கமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடை பெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு :-
காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில் கூறியிப்பதாவது:-
155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.
அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.
நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.
இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.
எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.
திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலக நன்மை வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழ வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பக்தர்களுக்கு பிரசாத பைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் லட்சார்ச்ச னை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது.
திமுக இளைஞரணி செய லாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாகை, கலைஞர் போட்டியிட விரும்பிய தொகுதி. விவசாயிகள், மீனவர்கள் நிரம்பிய நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.
இந்த கூட்டத்தை நாகையில் நடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
தி.மு.க. இளைஞரணியை பொறுத்தவரை உழைத்தால் யார் வேண்டுமானாலும் உயரலாம்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியாக இருந்தபோதும் போராட்டம் நடத்தினோம்.
தற்போதும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை தாண்டி உண்மையாக போராடுகிறோம்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் மாணவர்களுக்கு என்றும் துணை நிற்பேன்.
பதவி பொறுப்புக்காக தொடங்கப்பட்டது அல்ல, தி.மு.க. மாநில சுயாட்சிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் தான் தொடங்கப்பட்டது.
வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடக்கும் தி.மு.க. இளைஞரணி மாநாடு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
- தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிற்கு அரசு நிவராணம் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 படகுகளை சென்ற 22 மீனவர்களை தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை மற்றும் பொருட்களை இலங்கை கடற்கொ ள்ளை யர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இத்தக்குதலில் 8 மீனவர்கள் காயம் அடைந்து வேதாரண்யம், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது தமிழக எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளை யர்கள் தொடர்ந்து தாக்குவதும் பொருட்களை கொள்ளைய டிப்பதும் நடந்து வருகிறது.
எல்லை பகுதியில் மீனவர்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை முகாம் வேதாரண்யம் பகுதியில் அமைத்து நாள்தோறும் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் தொடர் தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பிட்டிற்கு அரசு உடன் நிவராணம் வழங்க வேண்டும்.
இந்திய எல்லையை ஒட்டிய கடல் பகுதிகளில் கைவரிசை காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ம் ஆண்டு பார்லி மெண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்க மீனவர்கள் மீதுதொடர் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடலில் கறுப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






