என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு துணை நிற்பேன்- அமைச்சர் பேச்சு
- நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது.
திமுக இளைஞரணி செய லாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாகை, கலைஞர் போட்டியிட விரும்பிய தொகுதி. விவசாயிகள், மீனவர்கள் நிரம்பிய நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.
இந்த கூட்டத்தை நாகையில் நடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
தி.மு.க. இளைஞரணியை பொறுத்தவரை உழைத்தால் யார் வேண்டுமானாலும் உயரலாம்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியாக இருந்தபோதும் போராட்டம் நடத்தினோம்.
தற்போதும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை தாண்டி உண்மையாக போராடுகிறோம்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் மாணவர்களுக்கு என்றும் துணை நிற்பேன்.
பதவி பொறுப்புக்காக தொடங்கப்பட்டது அல்ல, தி.மு.க. மாநில சுயாட்சிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் தான் தொடங்கப்பட்டது.
வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடக்கும் தி.மு.க. இளைஞரணி மாநாடு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






