என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே முன்விரோத தகராறில் பட்டதாரி பெண்ணை தாக்கிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் பனைமேடு காலனி தெருவில் வசித்து வருபவர் சாகுல்அமீது. இவரது மகள் தாரணி(வயது20). இவர் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சித்ரா(42). இவர்கள் இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்க தாரணி, சித்ரா ஆகியோர் சென்றனர். அப்போது சித்ரா, தாரணியை திட்டினார்.
பின்னர் தாரணி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது சித்ரா மீண்டும் திட்டியதுடன் தாரணியை தலையில் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தாரணி மண்எண்ணெய்யை எடுத்து குடித்துள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தாரணியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில், இலங்கை திரிகோணமலையில் இருந்து முகமது அன்சாரி, சல்மா வேகம் மற்றும் இவர்களது பத்து வயது மகன் ஆகியோர் சவுக்கு ப்ளாட் கடற்கரை பகுதிக்கு படகில் வந்தனர். தகவலறிந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர், கியூ பிரான்ச் போலீசார் அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்திடவும், தகவல்களை பரிமாறிடவும், பரிந்துரைகளை எடுப்பது மற்றும் புகார்களை பதிவு செய்திடவும் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அறை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
வாக்காளர்கள் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்ற சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாற்றம் தொடர்பான எல்லாவிதமான சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகூரில் பெண் தூய்மைப்பணியாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் காட்டுநாயக்கன் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி (வயது52). இவர் நாகை நகராட்சியில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை நாகூர் சிவன் மேலவீதியில் குப்பை அள்ளுவதற்காக மலர்கொடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மலர்கொடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மலர்கொடியை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மலர்கொடியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்கொடியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மறைஞாயநல்லூர், கருப்பம்புலம், கடினல்வயல், ஆதனூர், நெய்விளக்கு போன்ற பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பகலில் கடும் வெயில் மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவதால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் அதிகமாக பூத்து நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பகலில் கடும் வெயில் மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் விவசாயிகள் உள்ளனர். இயற்கை ஒத்துழைப்பு கொடுத்து மழை பெய்தால் சாகுபடியில் ஈடுபட முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் நவம்பர் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி, பூண்டி ரெயில்வே கேட் கீழத்தெரு பகுதியை சேர்ந்த தனபால் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் 13 வயதான சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமியின் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி தமிழ்ச்செல்வன், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடையின்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளை களைய ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கூலி மற்றும் ஏற்று கூலி மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும். சிறு, சிறு காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட கொள்முதல் பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வலிவலம் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வலிவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடியாலத்தூர் பாலம் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், வலிவலம் கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது48) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் இளவரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்ற கூடிய தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள சப்- கலெக்டர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும், 25, 26 ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை நன்றி கூறினார்.
கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூரில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் கிராமத்தில் வெள்ளை ஆற்று பாசனம் மூலம் மாவூர் ரெகுலேட்டர் அருகில் இருந்து தனி பாசனவாய்க்கால் மூலம் 7 கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் வந்து பல வருடங்களாக பாசனம் செய்து வந்தோம். ஆனால் இந்த வருடம் மாவூர் அருகே ஆற்று கீழ்குமுளி பொதுபணித்துறையினரால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 4 அடி ஆற்று கீழ்குமுளி கட்டப்பட்டு அதன் மூலம் எங்கள் பகுதிக்கு வந்த தண்ணீரை கொண்டு சாகுபடி செய்து வந்தோம். தற்போது அதை உடைத்து விட்டு புதிதாக 2 அடி அகலம் மட்டும் கட்டியதால் தண்ணீர் வரத்து சரியானபடி வராமல் தடைப்பட்டு போனது. புதிதாக கட்டப்படும் ஆற்று கீழ்குமுளி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்காமல் 2 அடி கட்டியதால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள சம்பா நெற்பயிர்கள் 500 ஏக்கர் தண்ணீர் வரத்து இல்லாமல் கருகி போனது. இதனால் மோட்டார் என்ஜின் வைத்து தண்ணீர் இரைத்து சாகுபடி செய்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் பயிர்கள் ஓரளவு வளர்ந்து வந்தது. தற்போது நாங்கள் பயிர்களை காப்பாற்ற மழையை நம்பி உள்ளோம். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுக்கீழ்குமுளியை பழையபடி மாற்றி அமைத்து தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடவாமேடு வனப்பகுதியில் ஆண் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தேசிய பறவையான மயில் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் மயில்கள் குறைவாகவே இருந்தன. தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து மயில்கள் தனது குஞ்சுகளுடன் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மற்றும் பழையார், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், வேட்டங்குடி, எடமணல், சரஸ்வதிவளாகம், கீரங்குடி, குன்னம், வடரங்கம், மற்றும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
நேற்று கொள்ளிடம் அருகே உள்ள மடவாமேடு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் குளிர்ச்சியான காலநிலை உருவாகி மழை பெய்யும் சூழல் உருவானது. அப்போது அங்கு உலாவிக்கொண்டிருந்த ஒரு ஆண் மயில் தோகை விரித்து ஆடியது. திடீரென மயில் தோகை விரித்து ஆடியதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.