என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் முல்லைப்பூ பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    வேதாரண்யம் பகுதியில் முல்லைப்பூ பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு

    வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மறைஞாயநல்லூர், கருப்பம்புலம், கடினல்வயல், ஆதனூர், நெய்விளக்கு போன்ற பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது பகலில் கடும் வெயில் மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவதால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் அதிகமாக பூத்து நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பகலில் கடும் வெயில் மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் விவசாயிகள் உள்ளனர். இயற்கை ஒத்துழைப்பு கொடுத்து மழை பெய்தால் சாகுபடியில் ஈடுபட முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×