என் மலர்
நாகப்பட்டினம்
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமை தாங்கினார். டாக்டர் புவனேஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் 52-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் ஊராட்சி செயலாளர் மதியழகன், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலில் மீன்பிடிக்க சென்ற கோடியக்காடு மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டை சேர்ந்த வீரப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சேர்ந்த சற்குணம் (வயது35), உத்திராபதி (20), அமிர்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
பின்னர் மீன்பிடித்து விட்டு வலையை திரும்பி எடுத்தபோது படகு விசிறியில் வலைகள் சிக்கிக் கொண்டதால் படகை இயக்க முடியாமல், பழுதடைந்து நின்று விட்டது. அந்த வழியே வந்த மற்ற மீனவர்கள் பார்த்து படகை நகர்த்த முயற்சி செய்தும் முடியவில்லை, வலையையும் அகற்ற முடியவில்லை. பின்னர் மற்ற மீனவர்கள் ஊருக்குச் சென்று ஆட்களை அழைத்து வருகிறோம் என்று கோடியக்காடு மீனவர்களிடம் கூறி விட்டு கரைக்கு வந்து விட்டனர்.
இதை தொடர்ந்து கோடியக்காடு மீனவர்களை மீட்க மற்ற மீனவர்கள் படகில் நேற்று சென்றனர். அப்போது அங்கு படகை காணவில்லை. மீனவர்களும் மாயமாகி இருந்தனர். பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் படகு எந்த பக்கம் சென்றது என்பது தெரியவில்லை என்றும், காற்று நீரோட்டத்தை பார்க்கும் பொழுது மல்லிபட்டினம், ஜகதாப்பட்டினம் பகுதிகளுக்கு படகு சென்றிருக்கலாம் என தேடி சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். படகுடன் மாயமான கோடியக்காடு மீனவர்களை சக மீனவர்களும் இரண்டு படகுகளில் தேடி வருகிறார்கள். மாயமாகி உள்ள கோடியக்காடு மீனவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
நாகப்பட்டினம் அருகே நெல் மூட்டைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஓட்டிச்சென்று 3 லாரிகள் மீது மோதிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை முதலாவது கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான எடை போடும் எந்திர மையம் உள்ளது. இங்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகள் எடை சரி பார்க்கப்பட்டு, அதன் பின்னர் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இங்கு எடை போடுவதற்கு காலதாமதம் ஆவதால், லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர்கள் அருகில் காத்திருப்பார்கள்.
இந்தநிலையில் நேற்று ஏராளமான லாரிகள் நெல் மூட்டைகளுடன் எடை போடுவதற்காக அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென வாலிபர் ஒருவர், ஒரு லாரியில் ஏறி, அதை ஓட்டி செல்ல முயன்றார். அப்பேது அருகில் இருந்த 3 லாரிகள் மீது மோதினார். இதில் மூன்று லாரிகளும் சேதம் அடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற லாரி டிரைவர்கள், அந்த வாலிபரை பிடித்து நாகை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அந்த வாலிபரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகை மாவட்டம் வலிவலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சேகரன் என்பவரின் மகன் தமிழ்வேந்தன் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வேந்தனை கைது செய்து அவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்த முயன்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கிராமத்துமேடு ஈவேரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விஜயராகவன் (வயது 26). விவசாய கூலிதொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த விஜயராகவன் கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடிகாலம் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
அதன்படி நேற்று மதியம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் பாண்டியன் என்பவருடைய படகு மூலம் முத்துலிங்கம் (வயது 28), ராஜூ(24), ரஞ்சித் (18), முருகன் (36)ஆகிய 4 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இன்று காலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 பேரையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேயன் துறைமுகத்தில் உள்ள முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மீனவர்கள் 4 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சங்கமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற பழையனூர் மேல்பாதியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் வீரமுருகன்(வயது 20), சாராயம் விற்றது தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற தரங்கம்பாடி மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடிகாலம் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
அதன்படி நேற்று மதியம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் பாண்டியன் என்பவருடைய படகு மூலம் முத்துலிங்கம் (வயது 28), ராஜூ(24), ரஞ்சித் (18), முருகன் (36)ஆகிய 4 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 பேரையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேயன் துறைமுகத்தில் உள்ள முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிக்கல் அய்யனார் கோவில் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் செங்கோட்டையன் (வயது33), தேவூர் குயவர் தெருவில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தர்மர் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் மனைவி பூமணி (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டையன், பூமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது58). தொழிலாளி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்போடையில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், செம்போடை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பொடை காளிதாஸ் என்பவர் வீட்டின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த காளிதாஸ் (வயது35), தேத்தாக்குடி தெற்கு கிருஷ்ணமூர்த்தி (54), வேதாரண்யத்தை சேர்ந்த மணிகண்டன் (42), செம்போடையை சேர்ந்த தேவேந்திரன் (40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பறவைகளை பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிக்காமல் பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளி கொண்டாடி வருகிறார்கள்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்த கிராமமாக திகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளது. இந்த பகுதியில் நீர்க்காகம், செந்நாரை, கொக்கு வகை பறவைகள் அதிக அளவில் தங்கியுள்ளன.
பெரம்பூர் கிராமத்தில் உள்ள மரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம், மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. தற்போது அந்தப்பகுதி பறவைகள் சரணாலயமாக திகழ்ந்து வருகிறது. இந்த பறவைகள் இங்கு தங்கி தனது குஞ்சுகளுடன் மார்ச் மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பி விடும். அதுவரை இங்கு இந்த பகுதி மக்கள் அந்த பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று இந்த பகுதி மக்கள் பறவைகளை பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிப்பது கிடையாது.
அந்த பகுதி கிராம மக்கள் கூறுகையில், பெரம்பூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்து இருப்பதால் பறவைகள் இனப்பெருக்கத்திற்கும், அவை அங்கு தங்குவதற்கும் ஏற்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. பறவைகள் பெரம்பூர் கிராமத்தில் மட்டுமே இடத்தை தேர்வு செய்து தங்கி வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் மட்டுமில்லாமல் பழந்தின்னி வவ்வால்கள் அதிகமாக காணப்படுகிறது.
எனவே இந்த பகுதி எப்போதும் இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் குழு அமைக்கப்பட்டு பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பறவைகள் வருகையால் பெரம்பூர் கிராமம் விழாக்கோலம் கொண்டுள்ளது. நாங்கள் பறவைகளை பாதுகாப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது இல்லை. எனவே இந்த கிராமம் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமமாக திகழ்கிறது.

வீட்டில் தானியாக தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள், சம்பவத்தன்று வீட்டில் தானியாக தூங்கி கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தாயாரை பார்த்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.