என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலுமே பிரதான தொழிலாக உள்ளது.

    இந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு புயல், கனமழை என பல்வேறு இடர்பாடுகளால் 60 சதவீதத்துக்கும் மேல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளள.

    இந்த நிலையில் பாப்பா கோவிலை சுற்றியுள்ள பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன. இந்த பன்றிகளானது அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்துக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியில் விவசாயிகள் கூறியதாவது:-

    பாப்பா கோவில் ஊராட்சி பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அருகில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டு பகுதியில், தஞ்சம் அடைந்துள்ள இந்த பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இவ்வாறு 100 ஏக்கரில் நெற்பயிர்களை நாசப்படுத்தி உள்ளது. பன்றிகள் நடந்து செல்லும் போது நெற்பயிர்கள் சாய்ந்து வயலிலே அழுகி விட்டது.

    நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை பிடிக்க ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றிகள் பிடிக்கப்பட்டன. முழுமையாக பிடிக்காமல், குறைந்த அளவிலேயே பிடிக்கப்பட்டதால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை மேய்கிறது. எனவே வயல்களுக்கு நடுவில் சிறிய குடில் அமைத்து இரவு, பகலாக கண்காணித்து வருகிறோம்.மேலும் பட்டாசு வெடித்தும் பன்றிகளை விரட்டி வருகிறோம். இருந்த போதிலும், பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை.

    மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லை என்றாலும், எஞ்சிய பயிர்களை அறுவடை செய்து நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த பன்றிகளின் தொல்லையால் ெபரும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த தங்கையன் மனைவி மீனா(வயது45) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதை போல கோவில் கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி தேடாசெல்வம்(63), சங்கமங்கலம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற குற்றம்பொருத்தானிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த தங்கையன் மனைவி மீனா(வயது45) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதை போல கோவில் கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி தேடாசெல்வம்(63), சங்கமங்கலம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற குற்றம்பொருத்தானிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    நாகையில் கோவிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.

    இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீரில் கோவிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோவில் முன்பு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் நாகை தோப்பு அருகே சந்திரா (வயது 40). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (25), ஆனந்த் (26) ஆகிய 2 வாலிபர்களின் மனதில் சபல புத்தி ஏற்பட்டு சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர். சிறிது நேரத்தில் சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்.

    இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பின்னர் அவரை விடுவித்தனர். அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார். அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சந்திரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை பொட்டவெளி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் அசோக் (வயது 27). இவர் சம்பவத்தன்று மயிலாடுதுறை கவரத்தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் வாசலில் அசோக் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். மறுநாள் காலை வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவி்ல்லை. அவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அசோக். மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்குவளை அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    திருக்குவளை அருகே சித்தாய்மூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கோபு (வயது32). கொத்தனார். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கோபு, நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கோபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்கழனி கடுவையாற்றகரையில் சாராயம் விற்ற காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் அருள் பாண்டி (வயது29), காக்கழனி கடுவையாறு சுடுகாடுஅருகே சாராயம் விற்ற காக்கழனி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அசரப் அலி மகன் சித்திக் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதன் பகவான் மற்றும் அகோரமூர்த்தி சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சுவாமி தரிசனம் செய்தார். புதன் பகவான் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி சங்கல்பம் செய்து வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியாக உள்ளதால் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் நிறை வேற்றலாம் என்ற ஆணவத்தில் மத்திய பா.ஜனதா அரசு உள்ளது. யாருடனும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

    தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 கொடுக்கிறது. நாங்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுக்க வலியுறுத்தினோம். தற்போது கொடுக்கும் பணத்தை கொரோனா முழுஊரடங்கின் போதே கொடுத்திருக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த வெற்றியும் அமையும்.

    தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜகுமார், பாலகுரு, சரத் சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கல் அய்யனார் கோவில் குளம் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜெகவீரபாண்டியன் (வயது43), ஆழியூர் பிரிவு சாலை அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராமச்சந்திரன் (33) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பழனிக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்ககதிரவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவா, வேளாண் விற்பனை குழு உறுப்பினர்கள் முரளி, மீனா, கூட்டுறவு சங்களின் இணை பதிவாளர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் அருகே பனங்குடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜ் வரவேற்றார். கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார்.

    இதில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, உதவி கலெக்டர் இந்துமதி, நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பக்கிரிசாமி, திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அப்துல் பாசித், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தலைஞாயிறில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அவை.பாலசுப்ரமணியன், வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணி துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில் துணைத் தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி உள்பட 94 ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 25 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் சி.பி.ஆர் பிரிவில் பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 94 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இந்த 94 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணி காரணமாக மார்ச் 31-ந்தேதியுடன் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை முடித்திட ஆலை நிர்வாகம் முடிவெடுத்தது. தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிடவும் முன்வர வில்லை. எனவே ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணியை இழக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டது. அதே போல் புரெவி மற்றும் நிவர் புயல்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு எக்ேடருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    புயல்கள் காரணமாக சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிக அளவு மழை பெய்ததால் பயிர்கள் பாதிப்படைந்து. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். ஆனால் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்யவில்லை. இதனால் 75.89 சதவீதம் தான் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக அளவீடு செய்து 100 சதவீத நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேளாங்கண்ணி சிறு, குறு வியாபாரிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி மாதா பேராலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால், இங்கு சிறு, குறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிறு, குறு வியாபாரிகளுக்கு அரசு வீட்டுமனைப்பட்டா வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×