search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திக் சிதம்பரம்"

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் மோடியின் பலத்துக்கு நிகராக யாரும் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாக்களித்தவர்கள் அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். அதை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது காங்கிரசுக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகங்கை தொகுதியில் இருந்து பலர் புகார் கடிதங்களை டெல்லி தலைமைக்கு அனுப்பினார்கள். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

    மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கார்த்தி சிதம்பரம், எம்.பி. மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருப்பதால் தமிழக காங்கிரசால் நடவடிக்கை எடுக்க இயலாது.

    எனவே அவர் மீது வந்த புகார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    கார்த்தி சிதம்பரம் விரைவில் விளக்கம் அளித்து கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை டெல்லி மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசினார்.
    • இதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் இவர், காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கார்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாக கருத்து சொல்லியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டுப் பேசியதற்கு விளக்கம் கேட்டு சிவகங்கை எம்.பி. கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் குமாரசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ×