என் மலர்
நாகப்பட்டினம்
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
- தமிழகம் முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர்.
இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த போது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 20-க்கும்மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரமேஷ் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாளை தொடர்பு கொண்டு, தலித் சமூகத்தை சேர்ந்த வைக்கக்கூடாது என்று ஜாதிய வன்மத்தோடு ரமேஷ் பேசி உள்ளார்.
- நீலாம்பாள், மகேஸ்வரியிடம் கூறி உள்ளார். பின்னர்செல்போனில் பதிவான ஆடியோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலர் என்று கூறப்படும், ஊட்டச்சத்து பணியாளர் மற்றும் ஊட்டச்சத்து உதவி பணியாளர்கள் ஆகிய பணியிடங்கள் சில மாதங்களாக காலியாக இருந்துள்ளது.
இந்நிலையில், திட்டச்சேரி பகுதியில் பணியாற்றி வரும் ஊட்டச்சத்து பணியாளர் ஒருவர் கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாள் என்பவர் தற்காலிமாக கோபுராஜபுரம் காலனித் தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் என்பவரின் மனைவி மகேஷ்வரி (வயது 38) என்பவரை நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கோபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் உமாமகேஸ்வரியின் கணவரும், ஒப்பந்தக்காரருமான ரமேஷ் என்பவர் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாளை தொடர்பு கொண்டு, தலித் சமூகத்தை சேர்ந்த அவரை பணியில் வைக்கக்கூடாது என்று ஜாதிய வன்மத்தோடு ரமேஷ் பேசி உள்ளார்.
இது குறித்து நீலாம்பாள், மகேஸ்வரியிடம் கூறி உள்ளார்.
பின்னர்செல்போனில் பதிவான ஆடியோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ், அந்த பெண்ணை புகார் அளிக்க விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது.
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சி ஸ்ட் கம்யூ. கட்சியின் தீண்டாமை ஒழிப்பு அமைப்பு, கோபுராஜபுரம் கிராம மக்கள் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மகேஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி செயலாளர் அறிவழகன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வ ளவன் ஆகியோர் உடன் சென்று திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் திட்ட ச்சேரி போலீசார் ரமேஷ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
- அதி நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 லட்சத்துக்கும் மேலானவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, 2008ம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது
இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 15, 2 அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேவை துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 3 லட்சத்து 1132 பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 64,539 பேரும், சாலை விபத்துகளில் 50,761 பேரும் இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,85,732, பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 435 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 370 தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே சேய் ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 132 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
- முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வந்தார்.
இவருக்கும், ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17.8.22 அன்று மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுத்த மணிவேலு என்ப வருக்கும்கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து.
இது சம்பந்தமாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டு ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தெற்குப்பொய்கைநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவில் அப்பானு மகேஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.
அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.
- சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி.
- சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி தொடக்கம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர் வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்போது ஜந்து ஆயிரம்மண் மூட்டையில் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பக்தர்கள் பசியாற்றுவதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
- புதிய எந்திரத்தில் பவுர்ணமியையொட்டி பூஜைகள் போட்டு உணவு சமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பசியாறுவதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த அரும் பெரும் பணியில் சிறு பங்களிப்பாக அன்னதானம் சமைப்பதற்காக பல வருடங்களுக்கு முன் அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையினர் வழங்கிய நீராவி சமையல் எந்திரம் (ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் முதல் பணி இது) லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்து வலுவிழந்தது.
அதன் பொருட்டு கோரக்க சித்தர் ஆசிரமத்திற்கு புதிதாக ஒரு சமையல் எந்திரம் வழங்கப்பட்டது.
அந்த புதிய எந்திரத்தில் பவுர்ணமியையொட்டி பூஜைகள் போட்டு உணவு சமைக்கப்பட்டது.
அதனை கோரக்கசித்தர் ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். ஜீவானந்தம் பூஜையுடன் துவங்கி வைத்தார்.
அறங்காவலர் கிருஷ்ணன் உடனிருந்தனர்.
இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பணியினை முன்னெடுத்த ஸ்ரீ அறுபடை குடும்பத்தை சேர்ந்த குமரகுருபரன், செல்வ கணேஷ், தியாகராஜன், ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.
- யாகத்தினால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது சிறப்பு.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாகம் நடந்தது.
இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு மற்றும் சித்தர் பீடங்களில் யாகம் செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு.
அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.
நாகூரில் எழுந்தருளி யுள்ள காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாக பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த யாக பூஜையினை வழக்கறிஞர் முத்துகுமரசாமி மற்றும் அவரது சகோதரி நீலாயதாட்சி ஆகியோர் செய்தனர்.
இந்த யாகத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேயர் மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் ஆகியோர் செய்தனர்
இந்த புரட்டாசி மாத யாகத்தை காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் காங்கேய சித்தர் அறக்கட்டளை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
- பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
- புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது.
இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப் பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.
இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
- விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
தற்போது தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,
திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,
துணைத்தலைவர் சோபா பாரதிமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்சி.
- நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம், மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்ச்சியில் 20 ஆயிரம் பனை விதைகளை நடும்பணியை துவக்கினர்
நிகழ்ச்சியில் பனைவிதை நடும்பணியினை நகராட்சி ஆணையர் ஹேமலாதா துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில்நகர் மன்ற தலைவர் புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம்,
ஓவர்சியர் குமரன் மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் தேத்தாகுடி சாரதா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். வேதாரண்யம் பகுதியின் சுற்றுசூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.
- ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
- கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம், சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று சேதப்படுத்துகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






