search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க களம் இறங்கிய நகராட்சி ஊழியர்கள்
    X

    மாடுகளை பிடிக்க களம் இறங்கிய நகராட்சி ஊழியர்கள்.

    சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க களம் இறங்கிய நகராட்சி ஊழியர்கள்

    • ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.
    • மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதிகள்மற்றும் கடைவீதிகளில் சுற்றிததிரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் 11ந் தேதிக்குள் பிடித்து கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கப்பட்ட கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும்.

    அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் நேற்று வரை மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர். நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாடுகளை பிடித்தனர். நகராட்சி மூலம் பிடிக்கப்பட்ட மாட்டிற்கு 1000 ரூபாய் விதம் அபராதம் பாரமரிப்பு செலவும் வசூலிக்கபடும் எனவும் தொடர்ந்து மாடுகள் பிடிக்கபடும் என நகராட்சி ஆணையர்ஹேமலதா தெரிவித்தார்.

    Next Story
    ×