என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொள்ளிடம் சோதனை சாவடி முக்கியமான சோதனை சாவடி ஆக இருந்து வருவதால் தற்போது இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களையும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் சோதனை சாவடி, கடலூர் மாவட்டமும், மயிலாடுதுறை மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து தான் அனைத்து வகையான வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் மார்க்கமாக செல்லுகின்றன. தொடர்ந்து 24 மணிநேரமும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    கொள்ளிடம் சோதனை சாவடி முக்கியமான சோதனை சாவடி ஆக இருந்து வருவதால் தற்போது இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களையும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உடனுக்குடன் கொள்ளிடம் சோதனை சாவடிக்கு வந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இரவு- பகல் 24 மணி நேரமும் போலீசார் இங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி வழியாக தேர்தலுக்காக வாகனங்களில் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கொள்ளிடம் சோதனைச் சாவடியில் திடீரென நடத்திய கொரோனோ பரிசோதனை முகாமில் நூற்றுக்கும்பட்டவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக வருபவர்களுக்கும், வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் மருத்துவர்கள் சத்யா, சிவனேசன், மருந்தாளுனர் நிஷாந்தி, ஆய்வக நுட்பனர் ஜெயா உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடியை கடந்து வருகின்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதயாத்திரை வரும் பக்தர்கள் உள்ளிட்டவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

    அப்போது அங்கு வருபவர்களிடம் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். தவறினால் அபராதம் கட்ட நேரிடும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

    கொள்ளிடம் சோதனைச் சாவடியில் திடீரென நடத்திய கொரோனோ பரிசோதனை முகாமில் நூற்றுக்கும்பட்டவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பொறையாறு மற்றும் சங்கரன்பந்தல் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அவற்றை பிடித்து காட்டில் விட வலியுறுத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு, காட்டுச்சேரி தரங்கம்பாடி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தற்போது குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.

    வீட்டு தோட்டத்தில் உள்ள மா, பலா, வாழை ஆகியவற்றின் காய்களை பறித்து சாப்பிடுவதுடன் அதிகமாக வீணாக்கி விடுகின்றன. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் சில வீடுகளில் புகுந்து உணவு பொருள்களை சாப்பிடுவதுடன், குடிநீர் பைப்புகளை உடைத்து சேதமாக்கி விடுகின்றன.

    மேலும் டி.வி. ஆண்டனாவை ஆட்டி உடைத்து விடுகிறது. அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க பாய்கிறது. எனவே குரங்குகள் வீட்டிற்குள் நுழையாதபடி எப்போதும் கதவை பூட்டியே வைத்திருக்க வேண்டி உள்ளது. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு கூட அஞ்சுகிறார்கள்.

    குரங்குகளின் அட்டகாசத்தால் பொறையாறு, சங்கரன்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெயில் காலத்தில் கூட காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்திருக்க முடியவில்லை என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

    கிராமங்களில் 5 முதல் 6 குரங்குகள் மட்டுமே தென்பட்டன. தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து 100-க்கணக்கான குரங்குகள் தென்படுகின்றன. இந்த குரங்குகளை தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகமும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
    பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி குணம் இருப்பவர்கள் அரசியல் செய்ய முடியும் என்று வந்தவர்கள் நாங்கள் என சீமான் பேசினார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி குணம் இருப்பவர்கள் அரசியல் செய்ய முடியும் என்று வந்தவர்கள் நாங்கள். நாட்டில் கூட்டுப்பண்ணை முறை உருவாக்கி விவசாயம் செய்வோம். உற்பத்தியான உணவுப்பொருட்களை அரசே விற்பனை செய்யும். ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் இலவசம்.

    தமிழகத்தில் 5 தலைநகரங்களை உருவாக்கி நிர்வாகம் செய்வோம். ஒரு தலை நகரத்தில் கிடைக்கும் வசதிகள் அனைத்து தலைநகரங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருவோம். கிராம பொருளாதார வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். எங்கள் கைகளை பலப்படுத்துங்கள். நாட்டை சிறப்பாக எப்படி நடத்துவது என்பதை உங்களுக்கு நிரூபித்து காண்பிக்கிறோம். தமிழகத்தை தலைசிறந்ததாக மாற்றி காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பூம்புகார் தொகுதி வேட்பாளர் காளியம்மாள், மண்டல செயலாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அன்னை தெரசா தெருவை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் இளவரசன் (வயது 26). வ.உ.சி. தெருவை சேர்ந்த பாக்யராஜ் மகன் ஸ்ரீராம் (18). இவர்கள் நேற்று திருக்கடையூர் அருகே உள்ள சின்னங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இளவரசன் ஓட்டி வந்தார். சின்னங்குடி மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் பரிதாபமாக இறந்தார். ஸ்ரீராம் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய டீக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் திருஞானசம்பந்தம் (வயது 33).

    இவருக்கும், டீக்கடை நடத்தி வரும் சீர்காழி ரெயில்வே ரோட்டை சேர்ந்த சாகுல்அமீது (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் திருஞானசம்பந்தம் டீக்குடிக்க வந்தபோது அங்கு வந்த சாகுல் அமீது அவருடைய சகோதரர் மன்சூர்அலி, தந்தை அப்துல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து திருஞானசம்பந்தத்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த திருஞானசம்பந்தத்தை அருகில் இருந்தவர்கள் மீ்ட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து திருஞானசம்பந்தம் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    கொள்ளிடம் அருகே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம் - உப்பங்காடு சாலை சீ்ரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் இருந்து வடரங்கம் செல்லும் பிரதான சாலையில், குன்னம் கிராமத்தில் இருந்து உப்பங்காடு கிராமத்துக்கு தார் சாலை உள்ளது.

    இந்த சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜல்லி கற்கல் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வீ்ட்டிற்கு வரும் போது மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம் - உப்பங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலைக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாய தொழிலும், மீன்பிடி தொழிலும் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும், செங்கரும்பு, சீனி கரும்பு, வாழை நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு, மரவள்ளிகிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் சுரைக்காய், மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்டவைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். பொறையாறு அருகே காழியப்பநல்லூர், ஆணைகோயில் மற்றும் செம்பனர்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். கார்த்திகை, ஆடி, சித்திரை ஆகிய 3 பட்டங்களாக பிரித்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து முன்னோடி விவசாயிகள் பிரபாகரன், சேகர் ஆகியோர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    நிலக்கடலையை மதுரை, சிவகாசி கன்னியாகுமரி, நாகர்கோவில், உசிலம்பட்டி, திருநெல்வேலி, பகுதியை சேர்ந்த கடலை மிட்டாய் குடிசை தொழிலாக செய்யும் சிறு, குறு வியாபாரிகள் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிக்கு வந்து நிலக்கடலையை தரம் பிரித்து கொள்முதல் செய்கின்றனர். அப்போது நிலக்கடலைக்கு தரத்துக்கு ஏற்ப குறைந்த விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. 

    நிலக்கடலை சாகுபடி செலவு, ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுக்கு தான் சரியாக உள்ளது. லாபம் கிடைப்பது இல்லை. எனவே செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலைக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். நிலக்கடலைக்கான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மணல்மேடு அருகே பனையகுடியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே பனையகுடியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்மாற்றி உள்ளது.

    இந்த வழியாக டிராக்டர், லாரி, பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலையின் வழியாக மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, சித்தமல்லி, கொண்டல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கக்கூடிய சாலையாகவும் உள்ளது.

    எனவே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இந்த சாலையில் இந்த மின்மாற்றி அமைந்து இருப்பது போக்குவரத்துக்கு பெரிதும் சிரமமாக உள்ளது. மேலும் இதன் அருகில் குடிசை வீடுகள் உள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள இந்த மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
    திருக்கடையூர் ஆக்கூர் பகுதியில் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் கடந்த சில மாதங்களாக நிறம் மாறிய மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய அரிசியே குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரே‌‌ஷன் கடை அரிசியை வாங்கி பயன்படுத்துபவர்கள் மிகவும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த விலையில்லா அரிசி வழங்கவில்லை என்றால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் போதிய உணவு இன்றி சிரமம் அடையக் கூடிய நிலை ஏற்படும். காரணம் கடைகளில் விற்கப்படும் அரிசிகள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு 25 கிலோ அரிசி ரூ.1,000 மற்றும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து கடைகளில் அரிசி வாங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக ரே‌‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து திருக்கடையூர் பொதுமக்கள் கூறுகையில், திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி தரமற்றதாக உள்ளது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சில கடைகளை தவிர மற்ற ரே‌‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அரிசியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரிசியை சமைத்து உண்ண முடியாத நிலையில் ஏழை, எளிய குடும்பத்தினர் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரே‌‌ஷன் கடைகளில் ஆய்வு செய்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் அண்ணன் கோவில் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 35). கிராம நிர்வாக அலுவலர். இவருடைய தாய் மல்லிகா (55). இவர்கள் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். உடனே தூங்கி கொண்டிருந்த மல்லிகா எழுந்து வந்து கதவை திறந்துள்ளார்.

    அப்போது அந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மல்லிகாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் வைத்திருந்த ரூ.85 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறையில் தங்கை இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது24). தொழிலாளி. இவரது தங்கை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வெங்கடேஷ் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவருக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இருப்பினும் தங்கை இறப்பை நினைத்து தினமும் மனம் வருந்தி வந்த வெங்கடேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய வெங்கடேசின் தாய் தவமணி தூக்கில் தனது மகன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். வெங்கடேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தங்கை இறந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவிழந்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×