என் மலர்
மயிலாடுதுறை
திருமுல்லைவாசல் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தடுப்பூசி முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், தி.மு.க. மாவட்ட நிர்வாகி முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமுல்லைவாசல் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனை சேர்ந்தவர் துர்காதேவி (வயது35). இவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்சினை செய்ததால் துர்காதேவி கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தொடர்ந்து துர்காதேவியிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த தூர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துர்காதேவி உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துர்காதேவி தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூம்புகார் அருகே தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்காடு:
பூம்புகார் சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மகன் அரவிந்த் (வயது 25). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். பூம்புகார் அருகே தர்மகுளம் பகுதியில் சென்றபோது பூம்புகாரில் இருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அரவிந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டத்தால் இன்று 1000 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த மீனவர்கள் சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் இன்றுமுதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை திருமுல்லைவாசலில் 1000 மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதேப்போல் பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி கிராமங்களிலும் மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மொத்தம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு, பைபர் படகு மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாட்டு படகு மீனவர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து மீனவ கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கூறும்போது:-
சுருக்கு மடி வலை மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தபோது ஏராளமான மீன்கள் கிடைத்தன. ஆனால் தடை காரணமாக வேறு வலையில் மீன் பிடிக்கிறோம். அதில் குறைந்தளவே மீன்கள் கிடைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1893-ன் படி கரையில் இருந்து 5 கடல் மைல்களுக்குள் எந்திரமாக்கப்பட்ட மீன்பிடி விசைப்படகை கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால் அந்த சட்டங்களை கண்டுகொள்ளாமல் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க கூடாது என்ற சட்டத்தை மட்டும் அமல்படுத்துவது ஏன்? என்று தெரியவில்லை.
ஏற்கனவே கொரோனா காலத்தில் போதிய வருமானமின்றி தவித்து வருகிறோம். மீன்பிடி தடைகாலத்தில் அரசு வழங்கும் நிவாரணமும் போதவில்லை. இந்த சூழ்நிலையில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளையும் பயன்படுத்த கூடாது என்பதால் எங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம். இதனை தவிர வேறு வழியில்லை என்றார். தொடர்ந்து உண்ணாவிரதத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு ஆதரவாக இன்று வணிகர் சங்கம் சார்பில் திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையாறு, சந்திரபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பதற்கு ஆதரவாக நாகை மாவட்டம் நம்பியார் நகர் சமுதாய கூடத்திலும் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் ஏராளமான மீனவ கிராம பெண்களும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டத்தால் இன்று 1000 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் உண்ணாவிரதம் நடந்து வரும் 5 இடங்கள் மற்றும் மீனவ கிராமங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் நம்பியார் நகரிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி கிராமத்தை சேர்ந்தவர் மங்களம்(வயது 70). இவர் கடந்த 11-ந் தேதி கடலி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். அவர்களை குத்தாலம் போலீஸ் ஏட்டு சுரேஷ் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டான். இதையடுத்து, பிடிபட்டவனை பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவன் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த குணசேகரன் மகன் முத்தழகன் என்பதும், தப்பி ஓடியவன் மயிலாடுதுறை திருவிழந்தூர் வடக்கு ஆராய தெருவை சேர்ந்த சேகர் மகன் இளையராஜா (வயது 21) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே நீடுரில் பதுங்கி இருந்த இளையராஜாவை பிடித்தனர். பின்னர் அவனிடம் இருந்து 2½ பவுன் சங்கிலி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளையராஜவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்தையன் மகன் விஜயராகவன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (39). கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் இறந்த வீரப்பன் என்பவரின் இறுதி சடங்கின் போது விஜயராகவனுக்கும், பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜயராகவன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டு வாசலில் நின்றுகொண்டு விஜயராகவனை வீட்டைவிட்டு வெளியே வர சொல்லி பிரபாகரன் திட்டியுள்ளார். இதனால் விஜயராகவன் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் விஜயராகவனை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர்.
அப்போது இதனை தடுத்த விஜயராகவனின் மனைவி தனலட்சுமி, தாய் பாஞ்சாலை, சகோதரர் சந்திரன் ஆகிய 3 பேரையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த விஜயராகவன், சந்திரன், தனலட்சுமி, பாஞ்சாலை ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக பிரபாகரன் (39), பிரகாஷ் (30), ஆகாஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மகாவிஷ்ணு, சத்தியேந்திரன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ஐயப்பன் (20). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐயப்பன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூதனூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
செம்பனார்கோவில் அருகே வாழைத்தார்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது55). இவர் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் கீழையூர் கிராமத்தில் குத்தகைக்கு வாழைப்பயிர் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இவரது கொல்லையில் விற்பனைக்கு தயாராக இருந்த 5 வாழைத்தார்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜெயபால் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செம்பனார்கோவில் அருகே வடுகபுஞ்சை கன்னிகோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (42), கிடாரங்கொண்டான் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) ஆகியோர் என்பதும், வாழைத்தார்களை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
கொள்ளிடத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை கொள்ளிடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் புலிஈஸ்வரி அம்மன் கோவில் எதிரே சிதம்பரம்- சீர்காழி சாலை ஓரத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சீர்காழியை அடுத்த மணல்மேடு பட்டவர்த்தி பகுதியை சேர்ந்த முருகன் (வயது35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த முட்டம் பாலம் அருகில் மணல்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 110 புதுச்சேரி சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாப்பாக்குடியை சேர்ந்த செல்லதுரை மகன் செல்வகுமார் (வயது 34) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர், ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் கிரிஜா, நவாஸ், மூங்கில் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மூவலூர் ரங்கநாதன், நவாஜ்தின், கமலநாதன், கிரிஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே. பி. எஸ்.எம். கனிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் காலி சிலிண்டர் மற்றும் ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்திருந்தனா். இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வி.ஆர்.ஏ அன்பு, துரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
குத்தாலம் தாசில்தார் அலுவலகம் அருகில் குத்தாலம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் சூர்யா தலைமையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட துணைத் தலைவர் சரத் சந்திரன், வட்டார தலைவர்கள் முகமது ரியாத், செந்தில், நகர செயலாளர் செந்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜம்பு கென்னடி, மிலிட்டரி செல்வராஜ், நவாஸ், ஊடகப் பிரிவு பொறுப்பாளர் வக்கீல் ராம்குமார், இளைஞர் காங்கிரஸ் சதீஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கொள்ளிடம் அருகே விஷம் குடித்து வேளாண் அலுவலக தற்காலிக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது38). இவர் கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வேட்டங்குடி கிராமத்தில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் அங்கு சென்று சுபாஷின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.