என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை-விழுப்புரம் ரெயில் நாளை வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
    • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும், மதுரை-கச்சக்குடா வாராந்திர ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்ருடிந்தது. வாடிப்பட்டியில் தற்போது பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ‌ மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் நாளை (5-ந் தேதி) முதல் வருகிற 9-ம் தேதி வரை வழக்கம்போல் மதுரையில் இருந்து இயக்கப்படும். அதேபோல மதுரை-கச்சக்குடா விரைவு ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 5.30 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்த பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் பெண்கள் உள்பட சிலர் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலமடை சிக்னலில் பிச்சை எடுத்ததாக கல்மேடு பரமசிவம் மனைவி வைத்தீஸ்வரி (வயது 22), சக்கிமங்கலம் பாண்டி மனைவி ஜெயா (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக எல்.டி.கே நகர் எல்லப்பன் (40) என்பவர் பிடிபட்டார்.

    மாட்டுத்தாவணி போலீசில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக, சக்கி மங்கலம், சட்டையாடி காலனியைச் சேர்ந்த முத்து மனைவி மேரி (20), தென்காசி மாவட்டம் பாம்பு கோவில் சந்தை சையது பட்டாணி, அரியலூர் தெற்கு தெரு கீர்த்திவாசன் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்ததாக சக்கிமங்கலம், நரிக்குறவர் காலனி சாய்பா மனைவி மல்லம்மா (20), கல்மேடு மஞ்சுநாதா மனைவி சாரதா (20), சத்தியமங்கலம் அன்னப்பம் மனைவி ராணி (20), கல்மேடு ஜம்பண்ணா மனைவி மஞ்சுளா (வயது 22), சக்கிமங்கலம் திருப்பதி மகள் முத்துமணி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • 22 மையங்களில் கிராம உதவியாளர் தேர்வு நடந்தது.
    • விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. இங்கு 400-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக 209 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வுக்கு, கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஆண்-பெண் உள்பட இரு பாலரும் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 7-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம உதவியாளர் பணியி டங்களுக்கான எழுத்துத் திறனறித் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கான ஹால் டிக்கெட்டுகள், இணைய வழி மூலம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கிராம உதவியாளர் திறனறி தேர்வு 22 மையங்களில் நடந்தன. இதற்காக விண்ணப்ப தாரர்கள் காலை 9 மணி முதலில் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.

    அங்கு அவர்களிடம் ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது.

    இதில் முதல் அரை மணி நேரம் தமிழ் எழுத்து திறனறி தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில எழுத்து திறனறித் தேர்வும் உள்ளடக்கியதாக இருந்தது. மதுரை மாவட்ட கிராம உதவியாளர் தேர்வு மையங்களில் காலை 9.30 மணி வரை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அதன் பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அதேபோல தேர்வு மையத்தில் இருந்து 10.50 மணிக்கு பிறகு, விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    மதுரை

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (5-ந்தேதி) காலை 9 மணி அளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வதோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    மாலை 4 மணியளவில் மதுரை பெரியார் பஸ் நிலை யத்தில் இருந்து நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக மவுன ஊர்வலமாக சென்று மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் அம்மா பேரவை சார்பிலும் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கும்படி வேண்டு கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை மாநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளரான கோபாலகிருஷ்ணன் கூறி யிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9 மணி அளவில் மதுரை சட்டக்கல்லூரி முன்பிருந்து மவுன ஊர்வலமாக சென்று கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • வாகன விபத்தில் அடையாளம் தெரியாத பெண் பலியானார்.
    • இன்ஸ்பெக்டர் சந்திரன்,சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரபாகரன் ஆகிேயார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம்-அருப்புக்கோட்டை சாலையில் செம்பூரணி ரோடு விலக்கு அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரன்,சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரபாகரன் ஆகிேயார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுமி-இளம்பெண் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோச்சடை காளான்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் கீர்த்திகா (வயது 17). சம்வத்தன்று அவரது தந்தை, கீர்த்திகாவை பெத்தானியாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டருகே இறக்கி விட்டு சென்றார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    மதுரை பெத்தானியா புரம் மேட்டுத்தெரு காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் துர்காதேவி (13). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.

    திருப்பூர் மாவட்டம் கரைபுதூர் சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (52). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மதுரை சிலைமான் அருகே உள்ள எஸ்.புளியங்குளம் கே.கே.நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (72). இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். அவரது மகள் மணிமேகலை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்கமுடி யவில்லை.

    மேற்கண்ட 4 சம்பவங்கள் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, கவுன்சிலர் சரசு ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரவண முருகன் வரவேற்றார். இந்த போட்டியில் 16 அரசு நடுநிலைப்பள்ளிகள், 4அரசு உயர்நிலைப்பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்லெட்சுமி, பாண்டிக்குமார், பெரியகருப்பன், சரண்யா, அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    • பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.

    மதுரை:

    ராமேசுவரம்-மண்டபம் இடையேயான பாம்பன் ரெயில் பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை, இதுதான் ராமேசுவரம்-மண்டபம் இடையேயான தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வந்தது. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் துரித ரெயில் போக்குவரத்துக்கு வசதியாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பாம்பன் கடலுக்கு நடுவே ரூ.535 கோடி செலவில் 2.05 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகளில் ரெயில்வே கட்டுமான துறையின் துணை அமைப்பான ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மும்முரமாக இயங்கி வருகிறது. அங்கு இதுவரை 84 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 99 இணைப்பு கர்டர்கள் அமைக்க வேண்டும். பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இதுவரை 76 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கர்டர் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு கர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் கப்பல் செல்வதற்காக, இருபுறமும் உயரும் கிரேன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது‌. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைவாகவே உள்ளது.
    • பூக்களின் விலை இன்று குறைந்து காணப்பட்டதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    மதுரை:

    மல்லிகைப்பூவிற்கு பெண்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் மணம் நிறைந்த மதுரை மல்லிகைப்பூவிற்கு தனிமவுசு உண்டு. இதனால் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மல்லிகைப்பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக விலையும் மற்ற நாட்களை விட மிகவும் அதிகரித்து காணப்படும்.

    மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பூக்கள் டன் கணக்கில் விற்பனை வருகிறது. இங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்வார்கள்.

    தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று காலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை நேற்றை காட்டிலும் கணிசமாக குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது.

    பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் நேற்றை விட இன்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.1 ஆயிரத்து 800-ஆக விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500 ஆக குறைந்தது. ரூ.1,900-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது.

    ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,500-க்கும், ஜாதிப்பூ ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், பட்டன்ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஸ் மற்றும் அரளிப்பூ ரூ.150-க்கும், ரோஜா ரூ.130-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும் விற்பனையானது.

    பூக்களின் விலை இன்று குறைந்து காணப்பட்டதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை மறுநாள் திருக்கார்த்திகை என்பதால் பூக்களின் விலை நாளை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    • அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.

    சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

    • பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதில் 18- 60 வயதுக்கு உட்பட்டோர் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை- விபத்து மரண உதவித்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை பெறலாம். இது தவிர பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.

    எனவே 60 வயது பூர்த்தி அடையாத பெண்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமானவரி சான்றிதழ், விலைப்புள்ளி விபரப் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை https://tnuwwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மதுரை எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (0452-2601449) தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    ×