போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்த பெண்கள் உள்பட 12 பேர் கைது

போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்த பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்த பெண்கள் உள்பட 12 பேர் கைது
Published on

மதுரை

மதுரை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் பெண்கள் உள்பட சிலர் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலமடை சிக்னலில் பிச்சை எடுத்ததாக கல்மேடு பரமசிவம் மனைவி வைத்தீஸ்வரி (வயது 22), சக்கிமங்கலம் பாண்டி மனைவி ஜெயா (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக எல்.டி.கே நகர் எல்லப்பன் (40) என்பவர் பிடிபட்டார்.

மாட்டுத்தாவணி போலீசில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக, சக்கி மங்கலம், சட்டையாடி காலனியைச் சேர்ந்த முத்து மனைவி மேரி (20), தென்காசி மாவட்டம் பாம்பு கோவில் சந்தை சையது பட்டாணி, அரியலூர் தெற்கு தெரு கீர்த்திவாசன் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதேபோல் மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்ததாக சக்கிமங்கலம், நரிக்குறவர் காலனி சாய்பா மனைவி மல்லம்மா (20), கல்மேடு மஞ்சுநாதா மனைவி சாரதா (20), சத்தியமங்கலம் அன்னப்பம் மனைவி ராணி (20), கல்மேடு ஜம்பண்ணா மனைவி மஞ்சுளா (வயது 22), சக்கிமங்கலம் திருப்பதி மகள் முத்துமணி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com