என் மலர்
மதுரை
- மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மதுரை
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்டப்பொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி. கே. எஸ். மாரிச்சாமி, முருகேசன்,முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி.கே.எஸ். மாரிச்சாமி, முருகேசன், முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி. ஆர்.ராஜ்மோகன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், உசிலை சசிகுமார், சோலை இளவரசன், பிரபாகர், சுந்தரா, குருசாமி, கார்த்திகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டபொம்மன் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளார்.
ம.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்ட பொம்மன் சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பூமிநாதன் எம்.எல்.ஏ., சுருதி ரமேஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை யொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருமங்கலத்தில் தி.மு.க. சார்பில் கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்ட பொம்மன் உருவப்படத்திற்கு அவைத்தலைவர் நாக ராஜ் தலைமையில் நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞரணி மதன்குமார், கவுன்சிலர்கள் திருகுமார், வீரகுமார், முருகன், வினோத், சரண்யா ரவி, கவுதம் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அன்னை பாத்திமா கல்லூரியின் உணவக மேலாண்மை மாணவர்கள் கத்தார் நாட்டில் சேவை புரிந்து திரும்பியுள்ளனர்.
- இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது.
மதுரை
கத்தார் நாட்டில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் துறை மாணவர்கள் சென்றனர்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் கத்தாரில் தங்கி சேவை புரிந்து திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது. இதில் 80 மாணவர்களுடன் துறைத் தலைவர் பால்ராஜ், உதவிப்பேராசிரியர்கள் கங்காதரன், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர்.
பயிற்சியில் பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 கல்லூரிகளுள் அன்னை பாத்திமா கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு பாராட்டிற்குரியதாக இருந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றனர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
மேலூர்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இது பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த ேகாவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்வாக திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. சொர்க்கவாசல் வழியே காளமேகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதனைக்காண ஒத்தக்கடை, மதுரை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அலுவலர்கள் செய்திருந்தனர்.
ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
- மதுரை அருகே கப்பலூரில் இன்று ரெயிலில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் இறந்து கிடந்தார்.
- இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துகிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபரின் முகம் மற்றும் உடலில் சிராய்ப்புகள் இருந்தன.
முதற்கட்ட விசாரணை யில் அவர் வடமாநில வாலிபர் என தெரியவந்துள்ளது. ரெயிலில் பயணித்தபோது தவறி விழுந்து வாலிபர் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மதுரையில் மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்.
- அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் காதலியுடன் பிடிபட்டார். அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் நிதி உதவி அளித்தனர்.
- மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்து ''எவர் கிரீன் 96'' நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர். தலைமை ஆசிரியர் ஆஷா தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி பிரியா வரவேற்றார். ராஜயோக தியானம் கூடத்தின் அமைப்பாளர்-ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவிகள் சார்பில் மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுசீலா தேவி செய்திருந்தார். சித்ரா தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.
- மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அனிதா ஆரோக்கிய செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது தாய் நான்சி மற்றும் தோழி கீதாலட்சுமி ஆகியோருடன், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேவாயலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் டவுன்ஹால் ரோட்டில் மற்றொரு தேவா லயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்ேபாது அவர்களை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென்று அனிதாஆரோக்கிய செல்வி, கீதாலட்சுமி ஆகி யோர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த 2 பேரும் திருடன்... திருடன்... என கூச்ச லிட்டனர்.அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி நகை பறிப்பு சம்பவத்தை அறிந்து, உடனே கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டார். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை யில் அந்த நபர் பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (வயது 28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து அனிதா ஆரோக்கிய செல்வியின் 1 பவுன் 5 கிராம் தங்க சங்கிலி மற்றும் கீதா லட்சுமி அணிந்திருந்த கவரிங் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்.
மதுரை:
பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்திலுள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் அரசின் பொது வினியோக திட்ட ரேஷன் பொருட்களான ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க வேண்டி மதுரை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையில் பணிபுரியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய இதரப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குடிமைப்பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தம் 695 கைப்பற்றப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது போல் வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- பொருட்களை அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வாங்குவதால் இவை தரமில்லாததாக இருப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு
- அரசு தரப்பில் குறுகிய காலங்களே இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதை முன்னெடுப்பது கடினம்.
மதுரை:
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க உள்ளது. அதை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என்று தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் தெரிவிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் ஒரு வழக்கினை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2.20 கோடி குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசானது வழங்கப்படுகிறது. 20 வகையான விவசாய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, வேட்டி- சேலையும் வழங்கப்படுகிறது.
அரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள மாநிலங்களில் வாங்குவதால் இவை தரமில்லாததாக இருக்கிறது. எனவே தமிழக விவசாயிகளிடம் இந்த பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை வாங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதேபோல பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியுமா? என்று கேட்டு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறுகிய காலங்களே இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதை முன்னெடுப்பது கடினம், அதுதவிர மினிமம் பேலஸ் என்று கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது, அத்துடன் மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதில் சிக்கல் இருக்கின்றது என்று அரசு தரப்பில் நிர்வாக சிக்கல்களை தெரிவித்தார்கள்.
அதற்கு நீதிபதி, மற்ற துறைகளின் இணைப்பு பணியை போல ஆதார் இணைப்பு பணியையும் செய்யலாமே என கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
- கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை.
- கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.
அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20-2-2021 அன்று வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத பல நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் அந்த அமைப்பின் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் 2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் இன்று வழங்கினர்.
அப்போது 2019-20 ஆம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது தொடர்பான தேர்வு குழுவை மாற்றியமைக்கவும், விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
- வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக் கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள் காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள் குடிநீருக்காக அடிக்கடி கிராமங்களுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் விலங்குகள் ரோட்டை கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் இறந்த கிடந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூச அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மைய தலைவர் மணி என்பவரது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை உரிமையாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு நுழைவு வாயில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் ஜல்லிக்கட்டு காளைகளை குல தெய்வமாக கருதி வளர்த்து வருகிறோம். ஜல்லி க்கட்டு போட்டியின்போது காளைகளுக்கு சந்தனம், குங்குமம் திருநீரு பூசக்கூடாது. சலங்கை மணியை கழுத்தில் கட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கின்றனர். இது எங்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூசவும், சலங்கை மணியை கழுத்தில் அணிவிக்க அனு மதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.






