என் மலர்tooltip icon

    மதுரை

    • தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

    மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து புதிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கல்வியாளர்களுக்கு என்று ஒரு அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அணியும் என 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 2 புதிய அணிகள் அறிமுகத்துக்கு தி.மு.க. பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க.வில் ஏற்கனவே 23 அணிகள் உள்ளன. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என்றும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்காக தி.மு.க.வில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

    மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியானது.

    தி.மு.க.வில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்டு கல்வியாளர் அணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்காக தி.மு.க.வில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டது.

    புதிய அணிகள் உருவாக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வில் உள்ள அணிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது.

    • பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

    மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
    • 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    மதுரை:

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

    மதுரை உத்தங்குடியில் 90 ஏக்கர் நிலத்தில், சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர். 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தி.மு.க. கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • 00 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

    மதுரை:

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது.

    மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

    இன்று காலையில் தொடங்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க 3,400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமையில் இருந்து தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், புதிதாக கொண்டு வரப்பட்ட திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், தமிழகத்தின் வளர்ச்சிகளை விளக்கி தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

      மதுரை:

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது.

      மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

      இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தார். அங்கிருந்து வெளியே வந்த முதலமைச்சருக்கு, தி.மு.க. தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலினும் தொண்டர்களை நோக்கி மகிழ்ச்சி பொங்க கை அசைத்தும், கைகுலுக்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

      மதுரையே ஆச்சரியப்படும் அளவுக்கு பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

      இதற்காக பெருங்குடி அம்பேத்கர் சிலை அருகே வந்தார். அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவரை வரவேற்றனர். மக்களை சந்தித்த அவர், ரோடு ஷோ நிகழ்ச்சியை தொடங்கினார். வரும் வழி எல்லாம் சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பெண்கள் திரண்டிருந்து முதலமைச்சரை வரவேற்றனர். வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மலர்கள் தூவினர்.

      பிரமாண்ட வரவேற்பை பார்த்து உற்சாகம் அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி நடந்தார். சாலையின் ஓரத்தில் நின்றிருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட அனைவருடனும் கைகுலுக்கியபடி நடந்து வந்தார்.

      அவ்வப்போது பிரசார வாகனத்தில் வந்த அவர், விமான நிலைய சாலை, வில்லாபுரம் பகுதிகளில் வந்தபோது மீண்டும் வாகனத்தில் இருந்து இறங்கி மக்களுடன் மக்களாக வந்து மகிழ்ச்சி பொங்க உரையாடினார். செல்பி எடுத்துக்கொண்டார். குறைகளை கேட்டறிந்தார்.

      பின்னர் மதுரையின் முதல் மேயர் முத்துவின் வெண்கல உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

      மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நடந்த இந்த ரோடு ஷோ இந்த பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்துள்ளது. பெருங்குடி பகுதியில் தொடங்கிய இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது, கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, ஆரப்பாளையம் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று இரவில் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

      இன்று காலையில் தொடங்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

      இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

      இந்த கூட்டத்தில் பங்கேற்க 3,400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமையில் இருந்து தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

      தி.மு.க. அமைப்பு ரீதியாக 76 மாவட்டங்கள் உள்ளன. அந்தந்த மாவட்டங்களுக்கு தனித்தனியாக சிறிய அரங்கு அமைக்கப்பட்டு அவர்களுக்கு பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கான உரிய படிவம் வழங்கப்படுகிறது. அதனை அவர்கள் நிறைவு செய்து, மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்டு பேட்ஜ் வாங்கி அணிந்து இன்று காலை 8 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் சென்று விட வேண்டும். அங்கும் மாவட்ட வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு காலை 9 மணி அளவில் தொடங்கி நடக்கிறது. மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

      வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு, அனைத்து ஏற்பாடுகளையும் நேற்று கண்காணித்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

      • மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
      • மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

      மதுரை:

      தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தொடர்ந்து 4 மணி நேரம் சுமார் 17 கி.மீ. ரோடு ஷோ சென்றார்.

      மதுரை மெஜியரா கோட்ஸ் ஆலை முன்பு, மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

      இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்தார்.

      முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
      • ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

      முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

      அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

      பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இதனை தொடர்ந்து இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைதொடர்ந்து, மதுரை மெஜியரா கோட்ஸ் ஆலை முன்பு, மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

      • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
      • முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

      முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

      அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

      பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.

      இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

      திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

      • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
      • சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

      முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

      அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

      பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இதனை தொடர்ந்து இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

      சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

      • மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
      • ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

      மேலும் மாநாட்டு திடலின் நுழைவு பகுதியில் பசுமையாக காட்சிதரும் வகையில் பிரமாண்ட புல்வெளி தரையுடன் பூங்காவும், அதன் நடுவே செயற்கை நீரூற்று, நீரூற்றின் மத்தியில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க. வின் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது.

      பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் என 4 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கான இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.

      பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாலையில் பிரமாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகிற்னர். மேலும், ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

      இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவிற்காக சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் திரைக்கட்டி மறைக்கப்பட்டுள்ளது.

      பந்தல்குடி கால்வாயில் சாக்கடை நீர் கலந்து காணப்படுவதால் துணி கட்டி தி.மு.க.வினர் திரை அமைத்துள்ளனர். மேலும், பந்தல்குடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் விளம்பர பலகையும் துணி கட்டி மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திரையை தி.மு.க.வினர் நீக்கினர். 

      • இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
      • தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

      மதுரை:

      தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

      இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இதற்காக அவனியாபுரம் வெள்ளக்கல், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜீவா நகர் சந்திப்பு, டி.வி.எஸ். பள்ளி பாலம், சுப்பிரமணியபுரம் ரவுண்டானா, காளவாசல், குரு தியேட்டர், ஏ.ஏ.ரோடு, புதுஜெயில் ரோடு, மேயர் முத்து சிலை, சிம்மக்கல் வழியாக அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.

      அங்கிருந்து நாளை (1-ந் தேதி) காலை பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்காக சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, ஐ.டி.ஐ., புதூர் பஸ் நிலையம், மூன்றுமாவடி, சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி ரோடு, மீனாட்சி மிஷன் சந்திப்பு, உத்தங்குடி பஸ் நிலையம் ஆகிய பகுதி வழியாக முதலமைச்சர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×