என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
    X

    மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

    • சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
    • 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    மதுரை:

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

    மதுரை உத்தங்குடியில் 90 ஏக்கர் நிலத்தில், சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர். 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தி.மு.க. கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×