என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.அழகிரியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
- மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மதுரை:
தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தொடர்ந்து 4 மணி நேரம் சுமார் 17 கி.மீ. ரோடு ஷோ சென்றார்.
மதுரை மெஜியரா கோட்ஸ் ஆலை முன்பு, மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்தார்.
முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






