என் மலர்
மதுரை
- ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள என்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பொன்னம்மாள்(வயது72). இவர் நேற்று தாதன்குளம் சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தாதன்குளத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பொன்னம்மாள் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் அவர் சீட்டின் ஓரத்தில் அமர்ந்ததாக தெரிகிறது.
ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது பொன்னம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.
இதனால் விபத்துக்கள் நிகழ்ந்து உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது35). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நாகலட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டார். 2-வது மகள் விஜயதர்ஷினி (வயது9), 4-வது மகள் சண்முகப்பிரியா(4) ஆகிய 2 பேர் வீட்டில் இருந்தனர்.
அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப்பாம்பு 2 பேரையும் கடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயதர்ஷினி மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுமி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கஞ்சா-கள்ளச்சாராய விற்பனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக மதுரை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
- நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 9498181206 என்ற சிறப்பு தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி எண்ணுக்கு கஞ்சா, கள்ளச்சாராயம், சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தகவல் தருபவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், தகவல் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை சித்திரை பொருட்காட்சி 13-ந்தேதி முடிவடைகிறது. இதுவரை 1.80 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
- மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதுரை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி யன்று தொடங்கியது.
இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
மேலும் மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறை களின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன.
அதேபோல இளை ஞர்கள் மற்றும் குழந்தை களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரசு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 ரூபாயும், சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுவரை அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 30 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகம் ஆகும். இந்தப் பொருட்காட்சி வருகிற வருகிற 13-ந்தேதியன்று நிறைவடைகிறது.
பொருட்காட்சியை கண்டுகளிக்க வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை காண்பித் தால் அவர்களுக்கு ராட்டி னம் உட்பட விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.
இந்த தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரி வித்துள்ளது.
- லாட்ஜில் தங்கியிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
சென்னை திருப்போரூர் நொம்மேலியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சரத்குமார்(வயது29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் உதவி காமிராமேனாக பணியாற்றி வந்தார்.
மதுரையில் உள்ள குறும்பட தயாரிப்பு நிறுவ னத்தில் பணியாற்று வதற்காக வந்திருந்த அவர், கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார்.
ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் அறையில் தங்கியிருந்த சரத்குமார் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து அவரது அண்ணன் சதீஷ்குமார், திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட 47 பேருக்கு ரூ5.83 லட்சம் நிதிஉதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை திருமோகூரில் திருவிழாவின் போது நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை கலெக்டர் சங்கீதா நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி உடல்நலம் விசாரித்தார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளுக்கு அதிகாரி களிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14,800/-மும், 34 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 200-ம், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு நிதி உதவித் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும்– என மொத்தம் 47 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா , ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர் சாமி, கிழக்கு வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
- போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.
குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.
மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.
தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.
அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்னை பாத்திமா கல்வி நிறுவனம் தடய அறிவியல் துறையில் தடம் பதித்துள்ளது.
- அதிக சம்பளத்தில் பணி செய்வது இக்கல்வி நிறுவனத்திற்கு மகுடம்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்வி நிறுவனம் பல ஆண்டுகளாக கல்வியில் தனி முத்திரை பதித்து வருகிறது.
தென் தமிழகத்தில் மாணவர்களுக்கு உலகத்தர மான கல்வி வழங்கும் நிறுவனம் இது. மாநில அரசின் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற இந்நிறுவ னம் பல்வேறு தொழில் சார்ந்த மேலாண்மை பட்ட, பட்ட மேற்படிப்புகளை வழங்குவதுடன், உடனடி யாக வேலை வாங்கி கொடுப்பதிலும் தென் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.
இங்கு பல்வேறு மாநிலங் கள், வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து பட்டம் முடித்து, வேலையும் பெற்றுச்செல்வது சிறப்புக்குறியது. கல்வியுடன் ஒழுக்கம், பேதம் நீக்கி, ஒற்றுமை உருவாக்க மாண வர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளருக்கும் சீருடைகளை வழங்கி கவுரவிக்கிறது.
மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கப்பல், விமானம், தேசிய வங்கிகள், ஐந்து நட்சத்திர உணவகம் மற்றும் ரிசார்ட்ஸ் போன்றவற்றில் பணி யாற்றும் அளவுக்கு திற மையை வளர்த்து, வளாகத்தேர்வு மூலம் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் 40 முதல் 50 நிறுவனங்கள் இங்கு வளாக நேர்முக தேர்வுக்கு (Campus Interview) வருவது கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
தற்போது வேலை வாய்ப்பு பெருகி இருப்பதை மனதில் கொண்டு தடய அறிவியல் துறையின் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பும் மதுரை காமராஜர் பல்கலை அங்கீகாரத்துடன் நடத்தப் படுகிறது.
இவை மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணினி அறிவியல், வணிகவியல், கணிதம், ஓட்டல் நிர்வாகம், குற்றவியல், சுற்றுலா, உணவகம், விமானம், மருத்துவம் போன்ற துறைகள் இங்கு நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனம், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாணவரின் பெற்றோர் வந்தால் நட்சத்திர சிற்றுண்டி வசதி, விளையாட்டுக்கூடம், வகுப்பறை, குளிர்சாதன வசதியுடன் பயிற்சி கூடம், தமிழக, கேரள, வெளிநாட்டு உணவு என 3 வித உணவு முறை வழங்குவது இந்நிறுவனமே. இங்கு மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. இங்கு பயின்றவர்கள் முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணி செய்வது இக்கல்வி நிறுவனத்திற்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.
- ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா பாத்திமா (வயது24). இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவில் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர்.
சிறிதுதூரம் சென்றதும் அவர்கள், ரபீனாபாத்திமா விடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (43) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த 5¾பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து கவிதா கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்திருந் தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
- தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்கிற அமைப்பு தொடங்கி கடந்த 762 நாட்களாக ரோட்டோ ரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.
அட்சயப்பாத்திரம் அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வருகை தந்தார். அங்கு அவர் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்டு பாராட்டி னார். அவருக்கு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அட்சய சேவா ரத்னா என்கிற விருது வழங்கி கவுரவித்தார்.
பிறகு அவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் சிலை மற்றும் பாதுகைக்கு வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர்கள் சிவ பிரபாகரன், சசி குமார், சசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் வரலாற்றை அறிந்து வியந்தனர்.
- சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.
அலங்காநல்லூர்
தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மலை மேல் இருக்கிறது. மேலும் மலையின் மீது ராக்காயி அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் பதினெட் டாம்படி கருப்பணசாமி, கள்ளழகர் கோவில் இருக்கி றது.
இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக் தர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்ற னர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகள், அழகர்கோவிலுக்கு வந்த னர். அவர்கள் முருகப்பெரு மானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும், சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விபூதி பூசிக் கொண்டனர். மேலும் அவர்கள் கோவில் வெளி மற்றும் உள் பிரகாரத்தையும், சஷ்டி மண்டபத்தையும் பார்த்து அங்குள்ள உற்சவர் சுவாமியை வணங்கினர். மேலும் சுவற்றில் வரையப் பட்டுள்ள ஓவியங்களையும் பார்த்து, அவற்றின் வர லாற்றை அறிந்து வியந்தனர்.
முன்னதாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி வரவேற்றார். அவருடன் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்த னர்.
- திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி ரம்யா (வயது36). இவர்கள் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று ஆலம்பட்டி-திருமங்கலம் மெயின் ரோட்டில் பாய்ஸ் டவுன் பகுதியில் ரம்யா நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 2 மர்ம நபர்கள், ரம்யா கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






