என் மலர்tooltip icon

    மதுரை

    • கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அஸ்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.புதூர் சம்பக்குளம் ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அம்ரிதா (30). இவர் தனது ஸ்கூட்டரில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குழந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென அம்ரிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் அம்ரிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு போனது.
    • நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போ ன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், பணம் செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர் அறைக்குள் புகுந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து லாட்ஜில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.‘

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இன்று ஆடி 3-வது வெள்ளிக்கிக்கிழமையை யொட்டி மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அதிகளவில் திரண்டு வழிபாடு செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை யிலேயே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை பக்தர்கள் தரினசம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சியளித்தார். சாதம், கூழ், பால், மோர் ஆகியவற்றை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கினர்.

    மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு பூஜை கள் தீபாராதனை நடந்தது.

    அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.

    • புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை வகுத்து மலை பகுதியில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடி மதிப்பில் ஏற்கனவே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் மைதா னத்திற்கு வருவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 3.3 கி.மீ. தூரம் ரூ.21 கோடியே 70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, பாலங்கள் கட்டுவதற்காக பூமிபூஜைகள் நடந்தது. இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துகுமாரி, இளநிலை பொறியாளர் வெங்கேஷ் பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகள் இடைகரை பாலம் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் வரை நடைபெறும். வரும் டிசம்பர் மாதம் கடைசியில் சாலை பணிகள் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், நகர் செயலாளர்கள் மனோகர வேல் பாண்டியன், ரகுபதி, அணி அமைப்பா ளர்கள் சந்தன கருப்பு, பிரதாப், கார்த்திக், ராகுல், சாலை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மூக்கன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி- ரூ.3¼ கோடி மதிப்பில் 24 திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் நேரடியாக அனைத்து பகுதி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும் பொது மக்களின் கோரிக்கை களை நிறை வேற்ற வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி 24 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    காலை 7 மணி அளவில் மாங்குளம் கிராமத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம சாவடியை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை போடுவதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டத்தை திறந்து வைத்தார்.

    வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியங்கி சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    அதே போன்று அரும்பனூர் ஊராட்சியில் அழகர் கோவில் சாலை சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைப் பட்டி, காயம்பட்டி கிரா மத்தில் புதிய நாடக மேடையை திறந்து வைத்தார்.

    பின்னர் இதேபோன்று கொடிக்குளம், திருமோகூர், ராஜாக்கூர், வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, கார்சேரி, சக்சி மங்கலம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மாவட்ட ஊராட்சி நிதி ஒன்றிய பொது நிதி, ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி போன்ற திட்டத்தின் கீழ் நீர் தேக்க தொட்டி கிராம சாவடி அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பயணிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 24 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி, ஒன்றிய சேர்மங்கள் வீரராகவன், மணி மேகலை, தி.மு.க. நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி, பால சுப்ரமணியன், திருப்பாலை சசிகுமார், மருதுபாண்டி, வழக்கறிஞர் கலாநிதி, நேருபாண்டி உள்பட ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர்.
    • ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டை சங்கத்தினர் 3 நாள் பயணமாக மலேசியா செல்கின்றனர். கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இண்டஸ்ட்ரியல், பிளாஸ்டிக், சித்தா, பேப்பர், என்ஜினியரிங் ஆகிய 5 தொழில்துறை சார்பில் தொழில்களை பெருக்கு வதற்காகவும், தொழில் முன்னேற்றம் அடைவ தற்காகவும் மலேசிய தூதரகம் வர்த்தக பிரிவு வான் அகமத் தர்மேஷ் இடிஸ் ஏற்பாட்டில் 15 பேர் கொண்ட குழு இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல உள்ளனர்.

    இதுகுறித்து கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    கப்பலூர் தொழிலதிபர் சங்கத்தின் சார்பாக 15 பேர் கொண்ட குழு மலேசியா வர்த்தகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நாளை செல்கிறோம். கப்பலூர் தொழிற்பேட்டை அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இதனை கருதுகிறோம். மலேசியா பயணம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மலேசியாவில் உள்ள வர்த்தகத்துடன் 25 பேர் கொண்ட குழு சேர்ந்து நாங்களும் வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோம்.

    மலேசியாவில் உற்பத்தி யாகும் பொருட்களை கோலாலம்பூரில் மலேசிய அரசு கண்காட்சி வைத்துள் ளது. அதனை பார்வையிட செல்கிறோம். மலேசியா பயணம் கப்பலூர் தொழில் பேட்டையை விரிவுபடுத்த உபயோகப்படும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பெண்கள் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார்.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்ட அவர் பள்ளியின் அடிப்படை வசதி, கல்வி தரம் போன்றவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சரிடம் கூடுதலாக விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி செய்து தருமாறு மாணவிகள் கோரிக்கை வைத்தனர். மாலை நேர வகுப்புகள் நடத்துமாறு அமைச்சர், ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன்,செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், நகர செயலாளர் வக்கீல் சத்ய பிரகாஷ், அவைத்தலைவர் ராமன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, திருவேடகம் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியை, ஆசிரியைகள், மாணவிகள் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து தலைமை ஆசிரியர் அலுவ லகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல், நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்க–ளுக்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல்காதர் வரவேற்றார்.

    கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார். கல்லூரி முதன்மை அதிகாரி எம்.எஸ்.சகிலா ஷா, நியூக் ளியர் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, முன் னாள் முதல்வர் டாக்டர் நவராஜ் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாகரன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். (சமூக பொருளாதார மறு கட்டமைப்பு வளர்ச்சி நிறு–வன தலைவர்) சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலாம் ஆண்டு மாண–வர்கள் வருகையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி–றோம். கல்லூரி வந்துள்ள கடைசி நிமிடங்களில் படித்து தேர்வு எழுதலாம் என்று நினைப்பது கை கொடுக்காது. கல்லூரி கல்வியை கற்றுத் தேர்வது மாணவர்களுடைய கையில் தான் உள்ளது. மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெற் றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

    மாணவர்கள் உலகத்தை வெல்ல வேண்டும் என்றால் நீ முதலில் உன்னை வெல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைவ–தற்கு அவர்களுக்குள்ளேயே ஒரு உந்து சக்தியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு நூலகங் களை அதிகமாக பயன்ப–டுத்துவதோடு கல்லூரி பேராசிரியர்களின் திறமை–யும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூ–ரியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட், ஏவியே–சன் ஸ்டடி, தடையவியல் துறை, மேலாண்மை துறை, கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி பேரா–சிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல் லூரி பேராசிரியை கார்த் திகா நன்றி தெரிவித்தார்.

    • வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம்-ரூ.27 ஆயிரம் கொள்ளை நடந்தது.
    • பெருங்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் பழைய நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் தனது மனை–வியின் பெயரில் உள்ள இரு சக்கர வாகனத்தை திறந்த நிலையில் உள்ள தனது காம்பவுண்ட் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. காணாமல் போன இருசக்கர வாகன பெட்டிக்குள் ரூ.27 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, பேங்க் பாஸ்புத்தகம், செக் புக், லைசென்ஸ் ஆகிய பொருட் களையும் மர்ம நபர்கள் வண்டியுடன் சேர்ந்து திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வரு–கின்றனர்.

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் வலையங்கு–ளம் பகுதியில் உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்த ராஜா (55). இவர் கடந்த ஐந்து வருடங்களாக திரு–மங்கலத்தில் உள்ள லாரி புக்கிங் ஆபீசில் டிரைவர் வேலை பார்க்கிறார். மதுரை சிந்தாமணி ரைஸ்மில்களில் தவிடு ஏற்றி உசிலம்பட்டி தேனி பகுதிகளில் இறக்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை நாலரை மணி அளவில் வலையங்குளம் பகுதியில் ஒட்டி வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்க முயன்ற போது அங்கு வந்த வலையபட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (23) என்பவர் கத்தியை காட்டி ராஜா சட்டைபையில் வைத்திருந்த ரூ.300 பணத்தை எடுத்துக் கொண்டார்.

    மேலும் வெளியே சொன் னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென் றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜாவை பெருங் குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி மருத்துவமனை மற்றும் லேப் செயல்பட்டு வந்துள்ளது.
    • வெளிநாட்டில் டாக்டர் படிப்பு பயின்றவர், தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாமல் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

    அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி மருத்துவமனை மற்றும் லேப் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் டாக்டர்கள் இன்றி செவிலியர்கள் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

    அதேபோல் அந்தப் பகுதியில் செயல்பட்ட மற்றொரு மருத்துவமனை மற்றும் லேபில் வேறொரு டாக்டர்கள் பெயரில் அனுமதி இன்றி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அதில் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு பயின்றவர், தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாமல் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவம் குழுவினர் மற்றும் போலீசார் அந்த மருத்துவமனைகள், மெடிக்கல்களில் சோதனை நடத்தினர். உரிய அனுமதியை பெற்ற பின்னர் மருத்துவமனை, மெடிக்கல்களை நடத்துமாறு கூறி அதற்கு பூட்டு போட்ட அதிகாரிகள் சாவியை போலீசில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், உரிய அனுமதி இன்றி செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களை வைத்து மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அண்ணாமலை நடைபயணத்துக்கு மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    • பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் வருகிற 5-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பயணம் செல்கிறார். இதையொட்டி 7-ந்தேதி மாலை பழங்கா நத்தம் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகி றார். மத்திய இணை மந்திரி மன்சூக் மாண்டவியா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட மேற்பார்வை யாளர்கள் கார்த்திக் பிரபு, ராஜரத்தினம், விருந் தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சதீஷ்குமார் சகாதேவன் முருகேஷ் பாண்டியன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து நிருபர்க ளிடம் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரை வரும் அண்ணாமலைக்கு 5-ந்தேதி ஜான்சிராணி பூங்காவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 7-ந்தேதி பழங்காநத்தத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கலந்து கொள்வார் கள் என எதிர் பார்க்கிறோம் என்றார்.

    • ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை ெஜய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வடிவேல் ெதருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அன்னை ஸ்ரீதேவி கருமாரி–யம்மன் கோவில் டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது. அன்று சக்தி பீடங்களுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விழா நாட் களில் ஸ்ரீதேவி கருமாரியம் மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் போடும் நிகழ்ச்சி, வாராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டுதல், வளைகாப்பு திருவிழா, குழந்தையில்லா பெண்க–ளுக்கு மடி நிரப்பும் வைப–வம், அம்மன் மடி கட்டிய பச்சை பயிறு வழங்குதல் நடைபெற்றது.

    இன்று (3-ந்தேதி) காலை பதிெனட்டாம்படி கருப்ப–சாமிக்கு சந்தனகுடம் அபி–ஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீதேவி கருமாரி–யம்மனுக்கு கண்திறக்கும் வைபவம் நடக்கிறது. நாளை (4-ந்தேதி) ஏழு கன்னி குழந்தைகளுக்கு கன்னி பூஜை, வைகை ஆற்றுக்கு சென்று அலகு குத்தி பால் குடம் எடுத்துவந்து, அம்ம–னுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும்,

    மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சொக்கத்தா ஊரணி சென்று அம்மனுக்கு சக்தி–கரகம் மற்றும் பூச்சொரிதல் எடுத்து திருவீதியுலா நடை–பெறும்.

    5-ந்தேதி காலை ஊர் பொங்கல், மாவிளக்கு வைப்பும், மாலை அக்கி–னிச்சட்டி எடுத்தல், இரவு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6-ந்தேதி 108 திருவிளக்கு பூஜை, 8-ந்தேதி தேவி கருமாரியம்மன் அருட்பிரசாதம் வழங்குதல், 11-ந்தேதி மறுபூஜை, கூழ் காய்ச்சி வழங்குதல், 20-ந்தேதி நாக சதுர்த்தியை முன்னிட்டு நாகருக்கும், புற்றுக்கும் சிறப்பு அபிஷேகமும், 21-ந்தேதி கருட பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய் துள்ளனர்.

    ×