அரசு பெண்கள் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

அரசு பெண்கள் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.
ஆசிரியைகளிடம் குறைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தார்.
ஆசிரியைகளிடம் குறைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தார்.
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்ட அவர் பள்ளியின் அடிப்படை வசதி, கல்வி தரம் போன்றவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சரிடம் கூடுதலாக விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி செய்து தருமாறு மாணவிகள் கோரிக்கை வைத்தனர். மாலை நேர வகுப்புகள் நடத்துமாறு அமைச்சர், ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன்,செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், நகர செயலாளர் வக்கீல் சத்ய பிரகாஷ், அவைத்தலைவர் ராமன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, திருவேடகம் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் போது உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியை, ஆசிரியைகள், மாணவிகள் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து தலைமை ஆசிரியர் அலுவ லகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com