search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.27 thousand"

    • வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம்-ரூ.27 ஆயிரம் கொள்ளை நடந்தது.
    • பெருங்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் பழைய நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் தனது மனை–வியின் பெயரில் உள்ள இரு சக்கர வாகனத்தை திறந்த நிலையில் உள்ள தனது காம்பவுண்ட் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. காணாமல் போன இருசக்கர வாகன பெட்டிக்குள் ரூ.27 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, பேங்க் பாஸ்புத்தகம், செக் புக், லைசென்ஸ் ஆகிய பொருட் களையும் மர்ம நபர்கள் வண்டியுடன் சேர்ந்து திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வரு–கின்றனர்.

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் வலையங்கு–ளம் பகுதியில் உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்த ராஜா (55). இவர் கடந்த ஐந்து வருடங்களாக திரு–மங்கலத்தில் உள்ள லாரி புக்கிங் ஆபீசில் டிரைவர் வேலை பார்க்கிறார். மதுரை சிந்தாமணி ரைஸ்மில்களில் தவிடு ஏற்றி உசிலம்பட்டி தேனி பகுதிகளில் இறக்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை நாலரை மணி அளவில் வலையங்குளம் பகுதியில் ஒட்டி வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்க முயன்ற போது அங்கு வந்த வலையபட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (23) என்பவர் கத்தியை காட்டி ராஜா சட்டைபையில் வைத்திருந்த ரூ.300 பணத்தை எடுத்துக் கொண்டார்.

    மேலும் வெளியே சொன் னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென் றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜாவை பெருங் குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் இறந்துவிட்டார்.
    • அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது பையில் இருந்த பணம் மாயமானது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 60). இவரது கணவர் ராமநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் இறந்துவிட்டார். இதனால் மல்லிகாவிற்கு அரசின் பென்சன் பணம் வருகிறது.

    சம்பவத்தன்று இவர் கணவரின் பென்சன் பணம் ரூ.27 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது பையில் இருந்த ரூ.27 ஆயிரம் மாயமானது தெரியவந்தது.

    பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது,.இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா இது குறித்து சேலம் டவுன் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×