என் மலர்
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள மேக்கலம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி கவிதா (வயது 36). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே போலியாக கலப்பு திருமண சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி சுதா (வயது 35). இவர் 2010-ம் ஆண்டு கலப்பு திருமண சான்று பெற்று 2014-ல் கணினி ஆசிரியராக பணி நியமன ஆணை பெற்றார். கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சோதனை செய்தபோது சுதா போலி கலப்பு திருமண சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கணினி ஆசிரியை சுதா பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியை மீது கல்வி அலுவலர்கள் சிங்காரப்பேட்டை போலீசில் புகர் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓசூர் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சூலாமலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் பெயிண்டு் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயக்குமார் இறந்தார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே வேன் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உச்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் லக்கசந்திரம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது சாலையில் தவறி விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த வேன் மோதி கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர், வக்கீல் இளங்கோ தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெங்களூரு சாலை வழியாக ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாணிக்கம், தொழிற்சங்க மண்டல பொருளாளர் மாதப்பன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சென்றாயப்பன், மகேந்திரன் வேலு, சின்னசாமி, பீமன், திருப்பதி, முருகன், செல்வக்குமார்,துணை தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் பச்சையப்பன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பாரதி, ராதாமணி, மகேஸ்வரி, தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ராஜேஷ், வேலு, ஒன்றிய தலைவர் சீனிவாசன், ராமசந்திரன், நகர செயலாளர் கோவிந்தராஜ், இளைஞரனி செந்தில்குமார், தினேஷ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், சீனிவாஷ், மாவட்ட அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மஞ்சுநாதன், மாவட்ட துணை செயலாளர் காடு பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சுபராணி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் நகர செயலாளர் வெங்கட்டாசலம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்தது. முன்னதாக வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்ைககளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த போராட்டத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பொன்னப்பன், மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட அவை தலைவர் மஞ்சுநாத், நிர்வாகிகள் ராஜ்குமார், பழனி, பாஸ்கர், திருவேந்திரன் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவரும், பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளருமான மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் திருப்பதி கவுண்டர், பரசுராமன், அனுமுத்தன், தமிழ்சங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சூலாமலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் பெயிண்டு் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. அதே போல் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த செண்பகவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செண்பகவல்லியின் தாய் மாரம்மா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பனப்பள்ளி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கல்லுக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சுமதி (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுமதி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுமதியின் தந்தை மாதேஷ் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம் என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆதாலியூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம்.

புதிய கட்சி தொடங்கும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று ஏன் கூறுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் திப்பசந்திரம்-ஒசஹள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதேபகுதியை சேர்ந்த குண்டப்பா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் சீதாராம்மேடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் ராஜாஜி நகரை சேர்ந்த கடைக்காரர் சீனிவாசரெட்டி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






