என் மலர்
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், ஜம்புகுட்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் பின்புறத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 47), முருகன் (36) மணி (25), நந்தகுமார் (37) மணிவண்ணன் (29) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
போச்சம்பள்ளி தாலுகா கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் தனது மொபட்டில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார், தீர்த்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த மல்லப்பா (வயது66) என்பவர் வீட்டின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்போல் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மல்லப்பா கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் எல்லேஸ் (வயது 38). விவசாயி. இவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி எல்லேஸ் இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி நர்சம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் 4 வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இங்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.
ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளராக கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சீனிவாச ராகவா (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 9.30 மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் போல 6 பேர் கொண்ட கும்பல் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்தது. கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தியுடன் வந்த அவர்கள் துப்பாக்கியை காட்டி நிதி நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா மற்றும் ஊழியர்கள் மாருதி (24), பிரசாத் (29), காவலாளி ராஜேந்திரன் (55) மற்றும் வாடிக்கையாளரான ஓசூர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த ராஜூ (22) ஆகியோரை தாக்கி கை, கால்களைக் கட்டிப்போட்டனர். மேலும் ஊழியர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்திரி ஒட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் நிதிநிறுவன லாக்கரின் சாவியை வாங்கி அதிலிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கை, கால்கள் கட்டுகளை அவிழ்த்து, இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கொள்ளை சம்பவம் நடந்த நிதி நிறுவனத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். மேலும் நிதி நிறுவன வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொள்ளையர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி வந்திருந்தனர். முகமுடியும் அணிந்து இருந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாக்கரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் பைரவி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் இதைப்போல நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகமுடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இந்தியில் பேசிக்கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் நகரின் மையப்பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், ஆனேக்கல் அருகே பஸ்திபூர் என்ற இடத்தில் அவர்கள் ஓசூர் நிதி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவிடம் பறித்த செல்போனை, வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அங்கு கிடந்த காலி பை ஒன்றையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.
தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு பையை எடுத்து அதில் நகைகளைப் போட்டு கொண்டு தப்பி சென்று உள்ளனர். அந்த பை ஜி.பி.எஸ். டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பை ஆகும். இதன் மூலம் அந்த பையை கொள்ளையர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிக்கு சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.
இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்தபோது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக்கொண்டு ஐதராபாத் சென்றது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஐதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். 6 பேரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக மேலாளர் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சான மாவு சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளை சுற்றிய வனப்பகுதிகளில் 200 யானைகள் உள்ளன. ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலும் சுமார் 30 யானைகள் கூட்டம் உள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வருகின்றன. இந்த யானைகள் கூட்டம் சுமார் 4 மாதங்கள் வரை முகாமிட்டு அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை தின்று வருகின்றன. இதில் ராகி யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆகும். ராகியில் பால் சூல் தருணத்தில் அதன் வாசனையை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே யானைகள் நுகர்ந்து இடத்தை கண்டுபிடித்து விடும். அந்த அளவுக்கு யானையின் மோப்ப சக்தி இருக்கும்.
மேலும் தினமும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் யானைகள் நடக்கும். தான் வந்த பாதையை சரியாக நினைவில் வைத்து கொள்ளும் அபார திறமை பெற்றவையாகும்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாததால் அடிக்கடி கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் , தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் கூட்டம் தற்போது அங்குமிங்கும் வனப்பகுதியிலேயே சுற்றி வருகின்றன. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, ஊடேதுர்க்கம், அஞ்செட்டி ஆகிய வனப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் புகுந்து விடுகின்றன. பின்னர் அங்கு விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வனத்துறையினர் இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி யானைகள் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் யானைகளால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கொத்தூரை சேர்ந்தவர் முனிரத்தினம்மா (வயது 45). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோரனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே விபத்தில் வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
ஊத்தங்கரை தாலுகா ஓலைப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 41) . வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் போக்கம்பட்டி முருகன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள மாடரஅள்ளியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் கடன் தொல்லையும் இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி அருகே காரில் கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே பட்டகபட்டி என்னும் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு, பொறியாளர் தனசேகரன் ஆகியோர் அந்த கிராமத்தில் சோதனை செய்தபோது கார் ஒன்றை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடுவதை கண்டனர். இதையடுத்து காரில் சோதனை செய்தபோது அதில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீட்டின் கதவை உடைத்து நகை, ஸ்கூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபண்டாவை சேர்ந்தவர் சாதியா (வயது 37). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க மோதிரம், 50 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்றனர். இந்த நிலையில் வீடு திரும்பிய சாதியா வீட்டில் நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.