என் மலர்
கிருஷ்ணகிரி
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீசார் அத்தலவாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரேஷ் பாபு (வயது 39) என்பவருடைய பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அவர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரேஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி நமீதா (வயது 26). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று நமீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நமீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள ஆருபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பாரதி (வயது 30). வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ரவுண்டானா அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கிருஷ்ணகிரி பூந்தோட்ட பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளத்தொடர்பை கிராம மக்கள் கண்டித்ததால் ஊத்தங்கரை அருகே தொழிலாளியுடன் விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர் பரிதாபமாக இறந்தார். தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊத்தங்கரை:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் குள்ளம்மாள் (வயது 42). அங்கன்வாடி பணியாளர். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில் குள்ளம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி பழனி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கேயே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். இதனால் குள்ளம்மாள், பழனி 2 பேரும் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குள்ளம்மாள் பரிதாபமாக இறந்தார். பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குள்ளம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கள்ளத்தொடர்பை கிராம மக்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பேக்கரி கடை ஊழியர் கடத்தி சென்று இருப்பது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கெம்பகரையை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவருடைய பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதில் கெம்பகரையை சேர்ந்த பேக்கரி கடை ஊழியர் தங்கராஜ் (37) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணத்தை அடுத்த முதலைகான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மன்னுகான் (வயது 70).இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று, சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 48) விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளியப்பன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காளியப்பன் நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை, தமிழரசி மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காளியப்பன் இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ராயக்கோட்டை கிருஷ்ணன் (வயது 29), ஆருப்பள்ளி லட்சுமணய்யா (60), பைரமங்கலம் லட்சுமய்யா (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ நகையை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேர் நாளை ஓசூருக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு மர்ம கும்பல் 25 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
கொள்ளையர்கள் கொண்டு சென்ற நகை பையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ரிங் ரோடு பகுதியில் கண்டுபிடித்தனர். 7 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் என்கிற ரூப் சிங் (22), சங்கர்சிங் பாகல்(26), பவன்குமார் விஷ்கர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி(24), அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான விவேக் மண்டல் (31), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் டீக்ராம் (55), கிளீனர் ராஜீவ்குமார் என்று தெரிய வந்தது.
கைதான 7 பேரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், ரூ.96 ஆயிரம் பணம், 13 செல்போன்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமித் என்ற விவேக் சுக்லா என்பவன் தலைமறைவாகி உள்ளான். அவனை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே தனிப்படையினர், கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரையும் நாளை ஓசூருக்கு அழைத்து வர முடிவு செய்து உள்ளனர். அதன்பிறகே இந்த கொள்ளையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது தெரிய வரும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு மர்ம கும்பல் 25 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
கொள்ளையர்கள் கொண்டு சென்ற நகை பையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ரிங் ரோடு பகுதியில் கண்டுபிடித்தனர். 7 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் என்கிற ரூப் சிங் (22), சங்கர்சிங் பாகல்(26), பவன்குமார் விஷ்கர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி(24), அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான விவேக் மண்டல் (31), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் டீக்ராம் (55), கிளீனர் ராஜீவ்குமார் என்று தெரிய வந்தது.
கைதான 7 பேரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், ரூ.96 ஆயிரம் பணம், 13 செல்போன்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமித் என்ற விவேக் சுக்லா என்பவன் தலைமறைவாகி உள்ளான். அவனை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே தனிப்படையினர், கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரையும் நாளை ஓசூருக்கு அழைத்து வர முடிவு செய்து உள்ளனர். அதன்பிறகே இந்த கொள்ளையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது தெரிய வரும்.
கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே லாரி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ்குமார் (வயது 36). லாரி டிரைவர். இவர் அகமதாபாத்தில் இருந்து விழுப்புரத்திற்கு கன்டெய்னர் லாரியில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை ஏற்றி சென்றார். கடந்த 21-ந் தேதி இரவு கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 பேர், டிரைவர் கமலேஷ்குமாரிடம் தகராறு செய்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து டிரைவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பர்கூரை அடுத்த ஜெகதேவியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (27) மற்றும் கூலித்தொழிலாளி நவீன்குமார் (26) ஆகிய 2 பேரும் லாரி கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் தெய்வநாயகி விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டியை சேர்ந்தவர் திருகுமரன். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த வித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வித்யா, தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார்.
புதுப்பெண்ணான வித்யா கடந்த 3 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வித்யா நேற்று முன்தினம் வேலம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகியும் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






