என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 வீடுகளில் 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). மின்சார வாரிய மேற்பார்வையாளர். இவர் சாமல்பட்டியில் நடந்த உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் சென்று இருந்தார். நேற்று முன்தினம் அக்கம் பக்கத்தினர் போன் மூலம், வீடு திறந்து கிடக்கிறது என ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே இருந்த பீரோ திறந்தும் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மத்திகிரியை அடுத்த அச்செட்டிப்பள்ளி கேட் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விவசாய நிலத்திற்கு சென்றார். மாலை அவர் வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு 3 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து பசுவராஜ், மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). கூலித்தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து மத்திகிரி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அடுத்த பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜம்மா (54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சரோஜம்மா கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி அமுதா (வயது 57). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அமுதா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அமுதா இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் பக்கமுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமியை ஒசஹள்ளி சோம்புறா கேட்டை சேர்ந்த முனிசாமியப்பா என்பவரின் மகன் எல்லப்பா (21) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் 29.10.2017 அன்று நடந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து வாலிபர் எல்லப்பாவை கைது செய்தார். அவர் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட எல்லப்பாவிற்கு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 12 ஆண்டு சிறை தண்டணையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கடத்தல் குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
ஓசூர் தாலுகா புக்கசாகரம் அருகே உள்ள எப்ரி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் அவரது தந்தை, இவருக்கு தெரியாமல் சொத்துக்களை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில், ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் டாக்டர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் தர்கா அருகே சமாதானபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 39). டாக்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றார். அப்போது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை திருடி சென்றனர். இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய நவீன்குமார் நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மினி வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தை அடுத்த சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர், மோட்டார்சைக்கிளில் கதிரிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, சாலையோரம் நடந்த சென்ற கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் ரவி மற்றும் துரை ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். துரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 19). இவர் ராயக்கோட்டையில் உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மது குடிக்க பணம் இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ் வெப்பாளம்பட்டியில் உள்ள மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கால்வாய் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 54). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை விட்டு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், நேற்று கரகூர் கூட்ரோடு அருகில் ஓடும் பாசன கால்வாய தண்ணீரில் மூழ்கி பொன்னுசாமி பிணமாக கிடந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கெலமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் திருவேணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருந்தார்.
இதனால் மனவேதனையுடன் இருந்த திருவேணி, கடந்த 26-ந் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மூச்சு திணறி பலியாகினர்.
கிருஷ்ணகிரி:
தர்மபுரியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கிருஷ்ணகிரி ஆனந்த் நகர் பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது.
இந்த பணியில் கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 40), முருகன் (55), சத்யசாய் நகரை சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய 3 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் 3 தொழிலாளர்கள் இறங்கிய உடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறி உள்ளே மயங்கி விழுந்தார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் பலியானது தெரியவந்தது. வெங்கடாசலபதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தர்மபுரியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கிருஷ்ணகிரி ஆனந்த் நகர் பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது.
இந்த பணியில் கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 40), முருகன் (55), சத்யசாய் நகரை சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய 3 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் 3 தொழிலாளர்கள் இறங்கிய உடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறி உள்ளே மயங்கி விழுந்தார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் பலியானது தெரியவந்தது. வெங்கடாசலபதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சாமல்பட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள நார்லபள்ளியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாதேஸ்வரன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவரரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோவிந்தப்பள்ளியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 30). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் சென்ற போது ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி நந்தினி ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.






