
போச்சம்பள்ளி அருகே பட்டகபட்டி என்னும் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு, பொறியாளர் தனசேகரன் ஆகியோர் அந்த கிராமத்தில் சோதனை செய்தபோது கார் ஒன்றை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடுவதை கண்டனர். இதையடுத்து காரில் சோதனை செய்தபோது அதில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.