என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேட்டர பள்ளியை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் அபிலாஷ் (28). பிரபல ரவுடியான இவர்மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனர்.
இவர் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள மைதானம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில், அவரது தலை, கழுத்து, கைகள் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட அபிலாஷ், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை கொலை செய்த வழக்கில், அபிலாஷ் முதல் குற்றவாளி என்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து வெளிவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
எனவே, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும், ஓசூர் டி.எஸ்.பி.முரளி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சித்தனப்பள்ளி சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 34) இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சீனிவாசனை அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர். சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
சீனிவாசன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 63 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும்.
இது குறித்து சீனிவாசன் ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியும் நேரடி விசாரணை நடத்தினார்.
மேலும் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது பெண், 45 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று கொரோனாவால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 404 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 ஆயிரத்து 930 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 433 பேர் சிகிச்சையில் உள்ளனர்.






