என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 284 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,357 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. இதில், 19 ஆயிரத்து 535 பேர் தடுப்பூசியை போட்டு கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 167 பேர் பாதிக்கப்பட்டனர். 258 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 167 பேர் பாதிக்கப்பட்டனர். 258 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 38 ஆயிரத்து 726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 36 ஆயிரத்து 954 பேர் குணமாகியுள்ளனர். தற்போது ஆயிரத்து 485 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் 2 முதியவர்கள், ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை 287 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    சூளகிரியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி சூளகிரி மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் மரக்கட்டைகள் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்சுதீன் (வயது 55), கிளீனர் ஜோகித் (20) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

    இதனிடையே அந்த வழியாக போச்சம்பள்ளி அருகே உள்ள கருப்பேரியை சேர்ந்த பூபாலன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மரக்கட்டைகள் சாலையில் கிடப்பதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பூபாலன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போச்சம்பள்ளி போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற சூளகரை நைனாதுரை (வயது 49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது. ஊத்தங்கரை போலீசார் முனியப்பன் கோவில் அருகில் ரோந்து சென்றபோது, லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரை நாராயணன் நகர் ஜீவா (36) என்பவரை கைது செய்தனர்.
    போச்சம்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி ராசி நகரை சேர்ந்தவர் மயில்வாகனன் (வயது 48). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து மயில்வாகனன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவமாதப்பா (வயது 40). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். இதனால் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலை குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 170 பேர் பாதிக்கப்பட்டனர். 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 170 பேர் பாதிக்கப்பட்டனர். 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 38 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 36 ஆயிரத்து 696 பேர் குணமாகி உள்ளனர். தற்போது ஆயிரத்து 579 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே நேற்று கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 75 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இறந்வர்களின் எண்ணிக்கை 284 ஆக அதிகரித்துள்ளது.
    சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகேயுள்ள எலசப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). விவசாயி. இவரை நிலப்பிரச்சினை தொடர்பாக வரதராஜ், வெங்கடேஷ் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ், வெங்கடேசை கைது செய்தனர்.
    ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நல்லூர் ராஜாஜி லே அவுட்டை சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 29). ரவுடியான இவர் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ளார். கொலை முயற்சி வழக்கில் கடந்த 10-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில், கடந்த 17-ந் தேதி இரவு பேடரப்பள்ளியில் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிசிங் (29), கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த நவீன் (31), ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த முரளி (29) ஆகியோர் அபிலாசை கொலை செய்தது தெரியவந்தது. பண விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சபரிசிங், முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பேரிகை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் வனச்சரகம் காருபலா பீட் வனக்காவலர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பேரிகை அருகே கடத்தூர்-சின்னகுத்தி சாலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நாட்டுத்துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சேர்ந்த சிவராஜ் (வயது 26) என்பதும், அவர் உரிய ஆவணம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபர் பேரிகை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மோதிரம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூரில், கருடா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30). தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் 20 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரையில் டீக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 50). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முனியப்பனின் மனைவி உண்ணாமலை குடியை நிறுத்துமாறு பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த முனியப்பன், தான் நடத்தி வரும் டீக்கடையில் தூக்கில் தொங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×