என் மலர்
செய்திகள்

விபத்து பலி
குந்தாரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி
குந்தாரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக கடந்த 12-ந் தேதி மாலை வேப்பனப்பள்ளிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது குந்தாரப்பள்ளி- வேப்பனப்பள்ளி சாலையில் திப்பனப்பள்ளி கூட்டு ரோடு அருகே சென்றபோது, எதிரில் வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தசாமியி்ன் சகோதரர், அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் குந்தாரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






