என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
- பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 8-வது வார்டில், கித்வாய் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் மனோ கரன், பேரூராட்சி துணைத்த லைவர் அப்துல்கலாம், 8-வது வார்டு கவுன்சிலர் முஜாமில் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், ஒன்றிய பிரதிநிதி அல்லாபகஷ், சித்திக், தில்லு பாய், நவாஸ்கான், முதாசீர் பாஷா, முகமத் பரித், தாவுத்கான், முபாரக், சித்திக் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
- தகவலின் பேரில் போலீசார் ஸ்பா சென்டரை சோதனை செய்தனர்.
- ஜனாப் கான் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூரில் பாகலூர் சாலையில் நல்லூர் ஜங்ஷன் அருகில் ஸ்பா சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அந்த ஸ்பா சென்டரை சோதனை செய்தனர். அதில் அந்த ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண்களை மீட்ட போலீசார், ஸ்பா சென்டரை நடத்தி வந்த ஜனாப் கான் (40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுடெல்லி பத்பூரை சேர்ந்த அவர் ஓசூர் நல்லூர் பகுதியில் தங்கி ஸ்பா சென்டர் பெயரில் இளம் பெண்களை விபசார தொழிலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் சரயு வழங்கினார்.
- பொதுமக்கள் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டததில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, அந்த மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 900 வீதம் ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி தலைவர் தலைமையில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்தனர்.
- ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓசூர்,
ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது எடப்பள்ளி கிராமம், இந்த கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எடப்பள்ளி கிராம மக்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் நேற்று, ஊராட்சி தலைவர் தலைமையில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்தனர். இந்த நிலையில், அந்த இடத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் ரேஷன் கடை கட்டினால் அதனை இடித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாயில் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் சப்-கலெக்டர் அலுவலகவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது.
- 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி கிராமம். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்ட வருகிறது. இந்த பணிகளுக்காக கிரானைட் கற்களை லேயிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதில் இருந்து வரக்கூடிய தூசிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் படிந்துள்ளது.
இதையடுத்து அவர்கள், கோவில் கட்டும் பணியை சுற்றிலும் துணி கட்டி பணி செய்யுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த நேரம் அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்க கூடிய பகுதிக்கு சென்றனர். அவர்கள் கற்களை வீசி அவர்களை தாக்கினார்கள். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
மேலும் ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கூரை தடுப்பிற்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு தரப்பினர் வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் தொடர்புடையவர்களையும், பிரச்சினைக்கு காரணமானவர்களையும் கைது செய்யக் கோரி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் சமரச தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து சோக்காடியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழரசி, கணேசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே அரசியல் கட்சி பிரமுகர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சோக்காடி-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் கல்வீச்சு நடந்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசாரிடம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த தரப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது50), ஆனந்தன் (39), சித்தேவன் (44), சித்தராஜ்(53), மற்றொரு சித்தராஜ் (55) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று சித்தராஜ் தரப்பினர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முனிராஜ் (49), வரதராஜ் (59), குமரன் (23), சத்தியமூர்த்தி (27), செல்வம் (37), சுப்ரமணி (42) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக சோக்காடி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
- ஒசூரில் திருமணம் நடந்து 10 நாட்களில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு இறந்தார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள திப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (வயது28) இவருக்கும் ஸ்சுமிதா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 20ந்தேதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் திடிரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஒசூர் அக்கோ போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் உட்பட 3 பெண்கள் மாயமாகினர்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் திம்மாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில் காருபாலாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. நர்சிங் மாணவி. கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிக்காட்டல் பயிலரங்கம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி களில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த இந்த உயர்கல்வி வழிகாட்டல் ஒருநாள் பயிலரங்கத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் 95 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என தெரி வித்தார். உதவி திட்ட அலு வலர் வடிவேலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கருத்தாளர்களாக சென்னை சாய்ஈசன், சவு மியா ஆகியோர் பங்கேற்று கருத்துரை யாற்றினர். இதில், அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்தி றன் கொண்ட 110 மாணவர் கள், அவர்களின் பெற்றோர் கள், 45 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரியில் சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதற்கு தாளாரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரு மான வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மகராஜகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது, போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் தான் வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகமாக வாகனங்களை ஓட்ட கூடாது என்றனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இந்த முகாமில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஓசூர் அருகே உலக அமைதிக்காக திருமூலருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்கு செல்லும் வழியிர கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு, உலக அமை திக்காகவும், உலக நன்மைக்காகவும் ஆருத்ரா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், சித்த காசிராஜன் தலைமையில், திருமூலர் சித்தருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, தொடர்ந்து பைரவர் பூஜை, நந்தீஸ்வரர் பூஜை, வராகி அம்மன் பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு களும், ஹோமங்களும், லிங்க சித்த ருக்கு சிறப்பு அபிஷே கமும் நடை பெற்றன.
பின்னர் பைரவர் தீபம், நந்தீஸ்வரர் தீபம், வராகி அம்மன் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தலைமை அர்ச்சகர் சண்முகம், வேள்வி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதில், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி ராஜி, கலா சந்திரன் ஆகியோரும், ஜெயகுமார் உள்ளிட்ட சிவனடியார்கள், சித்தரடி யார்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
- ஒசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.40 லட்சம் மோடி செய்தார்.
- கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேசேகர் (வயது35) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதில் யூடிப்பில் பகுதி நேர வேலை உள்ளது. இதில் முதலீடு செய்து வேலை ப் பார்த்தால் பல லட்சங்கள் வரை சம்பா திக்காலம் என்று இருந்து ள்ளது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ராஜ சேகர் போன் செய்து பேசினார்.
அதில் பேசிய நபர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 6.39.439 பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகர் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் செல்போன் டவரில் செல்ப் மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 114 வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (62) இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தனியார் நினுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த செல்போன் டவரில் அலர்ட் ஒலி டவர் கண்காணிப்பாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவருக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து செல்போன் டவருக்கு சென்று பார்த்தபோது செல்போன் டவரில் இருந்த செல்ப் மோட்டர், மற்றும் கிராங்கிங் டிவைஸ்-1 ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்று இருந்தனர். இது குறித்து செல்போன் நிறுவன மேலாளர் மணி அளித்த புகாரின் பேரில், தருமபுரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அதில் சவுளுபட்டியை சேர்ந்த காவேரி மகன் சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.






