ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்த புரோக்கர் கைது

தகவலின் பேரில் போலீசார் ஸ்பா சென்டரை சோதனை செய்தனர்.ஜனாப் கான் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்த புரோக்கர் கைது
Published on

ஓசூர்,

ஓசூரில் பாகலூர் சாலையில் நல்லூர் ஜங்ஷன் அருகில் ஸ்பா சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அந்த ஸ்பா சென்டரை சோதனை செய்தனர். அதில் அந்த ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்களை மீட்ட போலீசார், ஸ்பா சென்டரை நடத்தி வந்த ஜனாப் கான் (40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுடெல்லி பத்பூரை சேர்ந்த அவர் ஓசூர் நல்லூர் பகுதியில் தங்கி ஸ்பா சென்டர் பெயரில் இளம் பெண்களை விபசார தொழிலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com